3 வயது மூத்த நடிகை; காதலித்து திருமணம் செய்ய ஆசைப்பட்ட மாதவன் - யார் தெரியுமா?
மாதவன் திருமணம் செய்ய நினைத்த நடிகை குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் மாதவன்
அலைபாயுதே படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமானார் நடிகர் மாதவன். இவர் தமிழில் மட்டுமல்ல இந்தியாவின் பல மொழிகளிலும் தன் நடிப்பு திறமையால் லட்சக்கணக்கான ரசிகர்களை கொண்டுள்ளார்.

சமீபத்தில் மாறா, ராக்கெட் விளைவு திரைப்படங்களில் நடித்திருந்தார். அதன்பின், பாலிவுட் நடிகை ஜூகி சாவ்லாவுடன் இணைந்து தி ரயில்வே மேன் என்ற நெட்பிளிக்ஸ் சீரிஸில் நடித்துள்ளார்.
ஜூகி சாவ்லா
இந்நிலையில் இவர் முன்னதாக அளித்த பேட்டி ஒன்றில், "ஜூகி சாவ்லா இந்த தொடரில் நடிக்க சம்மதம் தெரிவித்ததை அதிர்ஷ்டமாக கருதுகிறேன். எல்லோரிடமும் ஒரு வாக்குமூலத்தை அளிக்க விரும்புகிறேன்.

நான் ஜூகி சாவ்லா கயாமத் சே கயாமத் தக் படத்தை பார்த்த பின்னர் எனது தாயாரிடம் ஜூகி சாவ்லாவை திருமணம் செய்ய விரும்புகிறேன் எனக் கூறினேன்.
அப்போது எனக்கு அதுவே இலக்காக இருந்தது.” எனத் தெரிவித்துள்ளார். இந்த தகவல் ரசிகர்களிடையே தற்போது வைரலாகி வருகிறது.
அதிர்ஷ்டத்தின் கதவைத் திறக்கும் புதன் பெயர்ச்சி : இன்று முதல் உச்ச பலன்களை பெறும் 3 ராசிகள்! Manithan