பிரதமர் மோடி தலையுடன் ஒட்டி நின்று செல்பி எடுத்த நடிகர் மாதவன் - வைரலாகும் புகைப்படம்..!
பிரான்சின் பேஸ்டிலா தினம் எனப்படும் அந்நாட்டு தேசிய தினத்தில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி சென்று இருந்தார்.
உற்சாக வரவேற்பு
இந்தியாவில் இருந்து பாரிஸ் விமான நிலையம் சென்றடைந்த பிரதமர் நரேந்திர மோடியை அந்நாட்டு பிரதமர் எலிசபெத் பார்னே வரவேற்றார். அங்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் ஹோட்டலுக்கு சென்ற பிரதமர் மோடிக்கு அங்கு திரண்டு இருந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் வரவேற்பு அளித்தனர்.
உயரிய விருது வழங்கிய பிரான்ஸ்
தொடர்ந்து எலிசி அரண்மனைக்கு சென்ற பிரதமர் மோடிக்கு அதிபர் மேக்ரான் மற்றும் அவரது மனைவி பிரிகர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பின் அரண்மனையில் பிரதமர் மோடிக்கு இரவு விருது அளிக்கப்பட்டது. பின்னர் பிரதமர் மோடிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான கிராண்ட் கிராஸ் ஆப் தி லீஜியன் ஆப் ஹானர் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இந்த விருதினை பெரும் முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையை பெற்றுள்ளார் நரேந்திர மோடி.
வைரலாகும் புகைப்படம்
இந்த நிலையில் பிரான்ஸ் அதிபர் மேக்ரான் அளித்த விருந்தின் போது அங்கு வந்த நடிகர் மாதவன் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார்.
தொடர்ந்து பிரான்ஸ் அதிபர் மேக்ரானுடன் மாதவன் கலந்துரையாடினார்.பின்னர் பிரதமர் மோடி, அதிபர் மேக்ரானுடன் நடிகர் மாதவன் செல்பி எடுத்துக் கொண்டார்.
இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவேற்றியுள்ள மாதவன், பிரதமர் மோடி மற்றும் அதிபர் மேக்ரானுடனான சந்திப்பு அரவணைப்பு போல இருந்தது எனவும் இரண்டு பெரும் தலைவர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் என் மனதில் என்றென்றும் பதிந்திருக்கும் என்றார்.
பிரான்சும் இந்தியாவும் என்றென்றும் ஒன்றாக செழிக்கட்டும் அவர்களின் முக்கியமான மற்றும் நம்பமுடியாத பணியின் வெற்றிக்காகவும் பிரார்த்தனை செய்கிறேன் என்று நடிகர் மாதவன் தெரிவித்துள்ளார்.