‘16-ஏ வயசு தான்ங்க’ நடிகர் மாதவனின் மகன் செய்த சாதனை – ரசிகர்கள் வாழ்த்து, குவியும் பாராட்டு!
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வருபவர் நடிகர் மாதவன்.
இவர் கடந்த 1999-ம் ஆண்டு சரிதா என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு வேதாந்த் என்ற 16 வயது மகன் உள்ளார்.
நீச்சல் போட்டிகளில் தீவிர ஈடுபாடு கொண்ட வேதாந்த் முன்னதாக பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு பதக்கங்களை வென்றுள்ளார்.

இந்நிலையில், டென்மார்க் நாட்டில் நடைபெற்ற டேனிஷ் ஓபன் சர்வதேச நீச்சல் போட்டியில் மாதவனின் மகன் வேதாந்த் கலந்து கொண்டார். கோபன்ஹேகன் என்னுமிடத்தில் நடைபெற்ற நீச்சல் போட்டியில் இந்தியா சார்பில் கலந்துக்கொண்ட வேதாந்த்துடன் மற்றொரு இளைஞனும் பங்குப்பெற்றுள்ளார்.
இந்நிலையில் வேதந்துடன் கலந்துகொண்ட இளைஞன் தங்கப் பதக்கம் வென்றிருக்கிறார், 1500 மீட்டர் பிரிவில் வேதந்த் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார்.
இந்த தகவலை மாதவன் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு, தனது மகிச்சியை ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார். இதனை தொடர்ந்து வேதாந்த்துக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
உங்க குடும்பம் எங்கே சார்? முதல்வர் விஜய்க்கு ‘பர்சனல்’ கவுண்டர்! இணையத்தில் சூடுபிடிக்கும் இருதரப்பு மோதல் Manithan
அதிர்ஷ்டத்தின் கதவைத் திறக்கும் புதன் பெயர்ச்சி : இன்று முதல் உச்ச பலன்களை பெறும் 3 ராசிகள்! Manithan
வலி. வடக்கில் இராணுவத்தின் புதிய அடையாளம்! காற்றில் பறக்கும் மக்களின் காணி மக்களுக்கே வாக்குறுதி! IBC Tamil