பிரபல நடிகரின் தாயார் காலமானார் - துணை முதலமைச்சர் இரங்கல்!
நடிகர் கிச்சா சுதீப்பின் தாயார் காலமானார். பிரபல கன்னட நடிகர் கிச்சா சுதீப்.
நடிகர் கிச்சா சுதீப்
இவர் தமிழில் நான் ஈ உள்பட சில படங்களில் நடித்துள்ளார். இவரது தாயார் சரோஜா சஞ்சீவ் (86) வயது முதிர்வு, உடல் நலக்குறைவு காரணமாக பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். அவரது மறைவிற்கு ரசிகர்கள், திரைத்துறையை சேர்ந்தவர்கள் மற்றும் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தாயார் மறைவு
இதனை அறிந்த கர்நாடகாவின் துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் எக்ஸ் தளத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் சுதீப் மற்றும் சரோஜாவின் படத்தை வெளியிட்டு, “நடிகர் கிச்சா சுதீப்பின் தாயார் திருமதி சரோஜா காலமான செய்தி கேட்டு மனம் உடைந்தேன்.
அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன், இந்த இழப்பை தாங்கும் சக்தியை இறைவன் சுதீப் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு வழங்கட்டும். ஓம் சாந்தி.” எனப் பதிவிட்டுள்ளார்.