அண்ணான்னு மட்டும் வேண்டாம்; சாய் பல்லவியிடம் கெஞ்சிய சிவகார்த்திகேயன்!

Sivakarthikeyan Sai Pallavi Tamil Cinema
By Sumathi Oct 19, 2024 10:30 AM GMT
Report

அமரன் படத்தின் இசை வெளியீட்டு விழா தொடர்பான வீடியோக்கள் வைரலாகி வருகிறது.

அமரன்

கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பில் உருவாகியுள்ள அமரன் திரைப்படம் வரும் அக்டோபர் 31ம் தேதி தீபாவளி பண்டிகைக்கு வெளியாகிறது.

sivakarthikeyan - sai pallavi

முன்னதாக படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று பிரம்மாண்டமாக நடைபெற்றது. இயக்குநர் மணிரத்னம் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்துக் கொண்டனர்.

இந்நிலையில் அதில் பேசிய சிவகார்த்திகேயன், பிரேமம் படத்தை பார்த்து விட்டு சாய் பல்லவிக்கு ஃபோன் செய்து நல்லா நடிச்சிருக்கீங்க என்றவுடனே அண்ணா தேங்க்யூண்ணா என்றார். நான் உடனே ஷாக் ஆகிட்டேன்.

இதுதான் கடைசி ஆசை; இப்படித்தான் சாகணும் - வைராலாகும் சூப்பர் ஸ்டார் பேச்சு!

இதுதான் கடைசி ஆசை; இப்படித்தான் சாகணும் - வைராலாகும் சூப்பர் ஸ்டார் பேச்சு!


சிவகார்த்திகேயன் பேச்சு

அண்ணான்னு மட்டும் கூப்பிடாத, அந்த படத்துல வர மாதிரி என்ன மறந்து கூட போயிடுன்னு சொன்னேன். ஃப்யூச்சர்ல நீயும் நானும் ஜோடியாக கூட நடிக்கலாம்னும் ஒரு பிட்டு போட்டேன். அப்போ சொன்னது இப்போ நனவாகிடுச்சு.

amaran

சாய் பல்லவி நடிகை, ஸ்டார் என்பதெல்லாம் தாண்டி தனக்கான ஒரு ரசிகர் கூட்டத்தையே அவர் உருவாக்கி வைத்திருக்கிறார். சாய் பல்லவின்னாலே அது ஒரு பிராண்ட் என பாராட்டியுள்ளார்.

இதனைப் பார்த்துக்கொண்டிருந்த அவரது மனைவியின் கூர்ந்த கவனிப்பு குறித்த ரியாக்‌ஷன்ஸ் வைரலாகி வருகிறது.