வேலையை செய்யுங்கள், மக்கள் உங்களை நேசிப்பார்கள் : லோகேஷ் கனகராஜிற்கு கமல்ஹாசன் பதில்
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர்கள் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் ஆகியோர் இணைந்து நடித்துள்ள திரைப்படம் 'விக்ரம் திரைப்படம் இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த திரைப்படத்தில் நடிகர் சூர்யா கவுரவ வேடத்தில் நடித்துள்ளார். ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். கிரிஷ் கங்காதரன் இதற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்த நிலையில் இப்படத்தின் வெற்றி குறித்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பதிவில் :
நான் இந்த அளவுக்கு உணர்ச்சிவசப்பட்டதில்லை. எனக்கும், விக்ரம் படத்திற்காக நீங்கள் வழங்கி வரும் பேராதரவு வியப்படைய வைக்கிறது. இந்த அன்பை நான் எப்படி திரும்ப கொடுக்கப் போகிறேன் என்று தெரியவில்லை. கமல்ஹாசன் சாருக்கும் மக்களுக்கும் நன்றியுள்ளவனாக இருப்பேன்.
The only way you can do any debt management with a loving audience is to never become complacent. Do honest back breaking work, they love and respect that. My energy comes from their love.All power to your endeavors. RKFI will proudly support you like we did this time. Rock on. https://t.co/C01Ek31QyG
— Kamal Haasan (@ikamalhaasan) June 5, 2022
அனைவரையும் நேசிக்கிறேன் என்று அவர் பதிவிட்டிருந்தார். இந்நிலையில்லோகேஷ் கனகராஜ் ட்விட்டர் பதிவிற்கு பதிலளித்துள்ள நடிகர் கமல்ஹாசன்,தனது ட்விட்டரில் :
"அன்பான ரசிகர்களுக்கு நீங்கள் செய்யக்கூடிய ஒரே விஷயம் என்னவெனில் ஒருபோதும் மனநிறைவை அடையாமல் இருப்பது தான், நேர்மையாக உங்கள் வேலையை செய்யுங்கள், அப்படி செய்தால் மக்கள் அதை நேசிப்பார்கள், மதிப்பார்கள்.
என்னுடைய ஆற்றல் அவர்களின் அன்பினால் வருகிறது. உங்களது அனைத்து முயற்சிகளுக்கும் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் ஆதரவு எப்போதும் உண்டு" என்று அவர் பதிவிட்டுள்ளார்.