Tuesday, Jun 24, 2025

மத்தளம் அட்ரா டேய்..இரண்டே நாளில் 100 கோடி வசூல் - விக்ரம் பட குழு ஹேப்பி..!

Kamal Haasan Vikram Movie
By Thahir 3 years ago
Report

நடிகர் கமல் நடித்துள்ள விக்ரம் திரைப்படம் வெளியான இரண்டே நாட்களில் 100 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

விக்ரம் திரைப்படம்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல் நடித்துள்ள திரைப்படம் விக்ரம்.இத்திரைப்படத்தில் நடிகர் சூர்யா,விஜய் சேதுபதி,ஃபஹத் பாசில் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

மத்தளம் அட்ரா டேய்..இரண்டே நாளில் 100 கோடி வசூல் - விக்ரம் பட குழு ஹேப்பி..! | Vikram Movie 100 Crore In Two Days Collection

இத்திரைப்படம் கடந்த ஜுன் 3-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் வெளியான நாட்கள் முதல் திரைப்படம் குறித்த விமர்சனம் தொடர்ந்து சமூக வளைதலங்களில் பேசப்பட்டு வருகிறது.

100 கோடி வசூல்

விக்ரம் திரைப்படத்தை பார்பதற்கு திரையரங்குளில் கூட்டம் அலை மோதுகிறது. இதனால் அனைத்து திரையரங்குகளும் ஹவுஸ் புல் ஆக இருந்து வருகிறது.

இதையடுத்து விக்ரம் திரைப்படம் வெளியான இரண்டே நாட்களில் 100 கோடி வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படம் மற்றும் அஜித் நடிப்பில் வெளியான வலிமை திரைப்படம் ஆகியவை வெளியாகி வசூல் செய்த சாதனையை ஆண்டவரின் விக்ரம் திரைப்படம் முறியடித்து சாதனை படைத்துள்ளது.