லோகேஷ் கனகராஜை தொடர்ந்து பிரபல இயக்குனருடன் கைக்கோர்க்கும் கமல் - ரசிகர்கள் உற்சாகம்!
கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள விக்ரம் படத்திற்காக மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்த ரசிகர்கள் தற்போது படம் பார்த்துவிட்டு இணையத்தில் விமர்சனங்களையும், பாராட்டுகளையும் அள்ளிக் குவித்து வருகின்றனர்.
விக்ரம் படம்
மாநகரம், கைதி, மாஸ்டர் படங்களை தொடர்ந்து தற்போது விக்ரம் படத்தை இயக்கி முடித்துள்ளார் கமலின் தீவிர ரசிகரான லோகேஷ் கனகராஜ். மேலும் கடைசி நேர ட்விஸ்ட்டாக இப்படத்தில் சூர்யா கெஸ்ட் ரோலில் நடித்தார்.
இந்த படம் ஜூன் 3-ம் தேதியான நேற்று வெளியான நிலையில், நான்கு வருடங்களுக்கு பிறகு வெளியாகும் கமல் படம் என்பதால் ரசிகர்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருந்தனர். அந்த வகையில், விக்ரம் படத்தை பார்த்த ரசிகர்களின் விமர்சனங்கள் இணையத்தில் கலைகட்டி வருகிறது.
பிரபல இயக்குனர்
சமீபத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகர் கமல், ‘விக்ரம்’ படத்திற்கு பிறகு அவர் நடிக்கும் அடுத்த படத்தின் வெளியீடு குறித்து பேசினார்.
அதன்படி, கமல்ஹாசன், மலையாள இயக்குனரான மகேஷ் நாராயணன் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக உள்ள தகவலை உறுதி செய்தார்.
இந்த அறிவிப்பு ரசிகர் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இயக்குநர் மகேஷ் நாராயணன் விஸ்பரூபம் 2 படத்தின் எடிட்டர் என்பது குறிப்பிடத்தக்கது.