இந்தியன் படத்தில் நடிக்க மறுப்பு; கமல்ஹாசன் கேட்ட அந்த விஷயம் - என்ன செய்தார் ஷங்கர் ?

Kamal Haasan Tamil Cinema Indian 2 Tamil Actors Tamil Actress
By Jiyath Jun 26, 2024 09:54 AM GMT
Report

இந்தியன் படத்தில் நடிக்க முதலில் மறுத்ததாக நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

கமல்ஹாசன் 

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் இரட்டை வேடங்களில் அசத்திய இந்தியன் திரைப்படம் கடந்த 1996-ம் ஆண்டு வெளியானது. இந்த படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து, தற்போது 27 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது.

இந்தியன் படத்தில் நடிக்க மறுப்பு; கமல்ஹாசன் கேட்ட அந்த விஷயம் - என்ன செய்தார் ஷங்கர் ? | Actor Kamal Haasan About Indan Movie

இந்த படத்தின் டிரைலர் நேற்று வெளியாகி ரசிகர்களிடையே கவனம் பெற்று வருகிறது. மேலும், அடுத்த மாதம் 12-ம் தேதி இந்தியன் 2 படம் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் 'இந்தியன் 1' படத்தில் முதலில் தான் நடிக்க மறுத்ததாக நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

மனைவியை மீண்டும் திருமணம் செய்த நடிகர் - மணப்பெண்ணை அழைத்து வந்த மகள்கள்!

மனைவியை மீண்டும் திருமணம் செய்த நடிகர் - மணப்பெண்ணை அழைத்து வந்த மகள்கள்!

வேறு படம் 

வேறு படம் அவர் கூறியதாவது "முதலில் இந்தியன் படத்தில் நடிக்க எனக்கு விருப்பமில்லை. அப்போது இதேபோன்று வேறு படம் என்னிடம் இருந்தது. இதுபோன்ற பிரச்சினைகள் நடிகர்களுக்கு வரும். எனக்கும் அப்போது வந்தது.

இந்தியன் படத்தில் நடிக்க மறுப்பு; கமல்ஹாசன் கேட்ட அந்த விஷயம் - என்ன செய்தார் ஷங்கர் ? | Actor Kamal Haasan About Indan Movie

இதனால் நான் என் சம்பளத்தை உயர்த்தி கேட்டேன். ஆனாலும், தயாரிப்பாளர் உறுதியாக இருந்தார். இயக்குனரும் இந்த படத்தை எடுத்தால் என்னை வைத்துதான் எடுப்பேன் என்றார். இது என்னை மிகவும் ஆச்சரியப்பட வைத்தது" என்று தெரிவித்துள்ளார்.