மனைவியை மீண்டும் திருமணம் செய்த நடிகர் - மணப்பெண்ணை அழைத்து வந்த மகள்கள்!
16 ஆண்டுகளுக்கு பிறகு காதல் மனைவியை முறைப்படி திருமணம் செய்தார் நடிகர் தர்மஜன் போல்காட்டி.
நடிகர் தர்மஜன்
மலையாள காமெடி நடிகர் தர்மஜன் போல்காட்டி. கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு அனுஜா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர். இந்நிலையில் தற்போது கொச்சி அருகே கொங்கேர்பள்ளி மகாதேவர் கோவிலில் தம்பதி சாமி தரிசனம் செய்தனர்.
பின்னர் தர்மஜன் - அனுஜா இருவரும் மாலை மாற்றிக்கொண்டு முறைப்படி திருமணம் செய்தனர். இந்த நிகழ்ச்சியில் அவர்களது மகள்கள் மற்றும் நெருங்கிய உறவினர்கள் கலந்து கொண்டனர்.
திருமணம்
மேலும், புது மணப்பெண் போல் வந்த தாயை மகள்களே அழைத்து வந்து குடும்பத்தினருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இதனை தொடர்ந்து கொங்கையர் பள்ளி பதிவு அலுவலகத்தில் திருமணத்தை பதிவு செய்தனர்.
இதுகுறித்து தர்மஜன் போல்காட்டி கூறுகையில், "16 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சம்பவம் நிகழ்ந்து விட்டது. அதனை முறைப்படுத்துவதற்காக குடும்பத்தினரின் வேண்டுகோளை ஏற்று மீண்டும் திருமணம் செய்துள்ளேன். எனது மகள்களின் விருப்பத்தை நிறைவேற்றியுள்ளேன். இதை காண்பதற்கு எனது தந்தை, தாய் மற்றும் அனுஜாவின் தந்தை இல்லை" என்று தெரிவித்தார்.