திருமணத்திற்கு ரெடியான ஹரிஷ் கல்யாண்...பொண்ணு யார் தெரியுமா?

Harish Kalyan Only Kollywood Gossip Today Marriage
By Sumathi Jun 27, 2022 07:13 PM GMT
Report

ஹரிஷ் தனது திருமண அறிவிப்புகளை விரைவில் வெளியிடவுள்ளதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஹரிஷ் கல்யாண்

கடந்த இரண்டு மாதங்களில் நிக்கி கல்ராணி-ஆதி பின்னிசெட்டி மற்றும் நயன்தாரா-விக்னேஷ் சிவன் ஆகியோரின் இரண்டு பிரமாண்ட திருமணங்களை தமிழ் சினிமா கண்டுள்ளது.

திருமணத்திற்கு ரெடியான ஹரிஷ் கல்யாண்...பொண்ணு யார் தெரியுமா? | Actor Harish Kalyan All Set To Get Married

இந்த இரண்டு திருமணங்களும் நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. இவை ஒருபுறமிருக்க, ​​சமீபத்திய அறிக்கையின்படி, ஹரிஷ் கல்யாண் விரைவில் திருமணம் செய்து கொள்ளவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விரைவில் திருமணம்

பிரபல திரைப்பட விநியோகஸ்தர் கல்யாணின் மகன் தான் ஹரிஷ் கல்யாண். அவர் 2010-ல் 'சிந்து சமவெளி' படத்தின் மூலம் அறிமுகமானார். அந்தப் படத்தில் தான் நடிகை அமலா பாலும் அறிமுகமானார்.

harish kalyan

இதற்கிடையே ஹரிஷ் கல்யாணுக்கு நிச்சயிக்கப்பட்ட திருமணம் நடைபெறவுள்ளதாக பிரபல ஆங்கில ஊடகத்தில் செய்தி வெளியாகின்றன. ஹரிஷ் கல்யாணின் பெற்றோர் தங்கள் மகனுக்கு விரைவில் திருமணம் செய்து வைக்க முடிவு செய்து திருமண ஏற்பாடுகளை ஆரம்பித்துள்ளனர்.

 மனைவி யார்

ஹரிஷ் தனது திருமண அறிவிப்புகளை விரைவில் வெளியிடவுள்ளதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆகஸ்ட் கடைசி வாரத்திலோ அல்லது செப்டம்பர் மாத தொடக்கத்திலோ அவரின் பிரம்மாண்ட திருமணம் நடைபெறலாம் எனக் கூறப்படுகிறது.

இதற்கிடையே, ஹரிஷின் மனைவி யார் என்பதை அறிய ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். ஹரிஷ் கல்யாண் அடுத்ததாக சசியின் இயக்கத்தில் 'நூறு கோடி வானவில்' படத்தில் நடித்துள்ளார்.

இந்தப் படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. சித்தி இத்னானி கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில், ஹரிஷ் கல்யாண் வலுவான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தவிர மேலும் இரண்டு படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார்.  

ஓரினச் சேர்க்கைக்கு எதிர்ப்பு..காதலியை கரம்பிடிக்க ஆணாக மாறிய பெண்!