என்னை அடிமையா வச்சுருந்தாங்க; தயவு செஞ்சு போங்கனு.. மனம் திறந்த ஜிவி பிரகாஷ்!

Tamil Cinema G V Prakash Kumar Actors Tamil Actors Tamil Actress
By Jiyath Jun 17, 2024 11:51 AM GMT
Report

இயக்குநர் செல்வராகவன் குறித்து இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் பேசியுள்ளார். 

ஜி.வி.பிரகாஷ் 

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களுள் ஒருவராகவும், நடிகராகவும் வலம் வருபவர் ஜி.வி.பிரகாஷ் குமார். இவர் இசையமைப்பில் முதன்முதலாக வெளியான திரைப்படம் வெயில். தொடர்ந்து பல படங்களுக்கு இசையமைத்து மக்கள் மனதில் இடம்பிடித்தார்.

என்னை அடிமையா வச்சுருந்தாங்க; தயவு செஞ்சு போங்கனு.. மனம் திறந்த ஜிவி பிரகாஷ்! | Actor Gv Prakash About Director Selvaraghavan

மேலும், டார்லிங் படம் மூலம் ஹீரோவாக அறிமுகமான இவர், இதுவரை 24 படங்களில் நடித்துள்ளார். இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான ஆயிரத்தில் ஒருவன் மற்றும் மயக்கம் என்ன ஆகிய 2 படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

கேன்சர் பாதிப்பு.. ரத்தத்தில் வந்த அந்த ஒரு கடிதம் - காதல் தினம் பட நடிகை வேதனை!

கேன்சர் பாதிப்பு.. ரத்தத்தில் வந்த அந்த ஒரு கடிதம் - காதல் தினம் பட நடிகை வேதனை!

செல்வராகவன் 

இந்நிலையில் செல்வராகவன் குறித்து நேர்காணல் ஒன்றில் பேசிய ஜி.வி.பிரகாஷ் "ஆயிரத்தில் ஒருவன் படத்தப்போ என்னை அடிமையா வச்சிருந்தாங்க ஸ்டுடியோல. என்னால் மறக்கவே முடியாது. 4 நாள் ஸ்டுடியோலையே கிடந்தேன். செல்வராகவனும் போக மாட்டிங்கிறாரு.

என்னை அடிமையா வச்சுருந்தாங்க; தயவு செஞ்சு போங்கனு.. மனம் திறந்த ஜிவி பிரகாஷ்! | Actor Gv Prakash About Director Selvaraghavan

தயவு செஞ்சு போங்க நான் வாசிச்சு வைக்கிறேன். தயவு செஞ்சு போங்க அப்படினு சொன்னேன். மயக்கம் என்ன படம்லாம் 4 நாள் வாசிச்சு குடுத்தேன். செல்வராகவன் போகவே மாட்டாரு. நான் இங்க தான் இருப்பேன்.. நீ வாசி.. அப்படினு இருப்பாரு" என்று கலகலப்பாக பேசியுள்ளார்.