கேன்சர் பாதிப்பு.. ரத்தத்தில் வந்த அந்த ஒரு கடிதம் - காதல் தினம் பட நடிகை வேதனை!

Tamil Cinema Indian Actress Tamil Actors Tamil Actress Actress
By Jiyath Jun 17, 2024 12:22 PM GMT
Report

தனது ரசிகர்களின் செயல்கள் குறித்து நடிகை சோனாலி பிந்த்ரே பேசியுள்ளார்.

சோனாலி பிந்த்ரே

கதிர் இயக்கத்தில் குணால் நடிப்பில் கடந்த 1999-ம் ஆண்டு வெளியான திரைப்படம் காதலர் தினம். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. ஏ.ஆர். ரஹ்மான் இசையமைப்பில் வெளியான இத்திரைப்படத்தின் பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் ஹிட் அடித்தது.

கேன்சர் பாதிப்பு.. ரத்தத்தில் வந்த அந்த ஒரு கடிதம் - காதல் தினம் பட நடிகை வேதனை! | Kadhalar Dhinam Actress Sonali Bendre About Fans

இந்த படத்தில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை சோனாலி பிந்த்ரே. இந்தியில் முன்னணி நடிகையாக இருந்த இவருக்கு, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டது. இதனையடுத்து வெளிநாட்டில் சிகிச்சை பெற்று குணமாகி தற்போது மீண்டு வந்துள்ளார்.

என்னை அடிமையா வச்சுருந்தாங்க; தயவு செஞ்சு போங்கனு.. மனம் திறந்த ஜிவி பிரகாஷ்!

என்னை அடிமையா வச்சுருந்தாங்க; தயவு செஞ்சு போங்கனு.. மனம் திறந்த ஜிவி பிரகாஷ்!

தற்கொலை 

இந்நிலையில் தனது ரசிகர்களின் செயல்கள் குறித்து பேசிய அவர் "ஒரு முறை போபாலை சுற்றிப்பார்க்க சென்றிருந்தேன். அப்போது என்னை சந்திக்க முடியாமல் போனதால் எனது ரசிகர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாக சிலர் கூறினர்.

கேன்சர் பாதிப்பு.. ரத்தத்தில் வந்த அந்த ஒரு கடிதம் - காதல் தினம் பட நடிகை வேதனை! | Kadhalar Dhinam Actress Sonali Bendre About Fans

இது என்னை மிகவும் அதிர்ச்சியடைய செய்தது. இதேபோல், எனக்கு மெயிலில் ஒரு கடிதம் வந்தது. அதில் சிவப்பு நிறத்தாலான எழுத்துகள் இருந்தன. அது ரத்தமா? என்று சோதித்து பார்த்து ஆச்சரியப்பட்டேன்.

இப்படியும் செய்வார்களா? . எப்படி ஒரு மனிதனை இப்படி ஒரு இடத்தில் வைத்துப் பார்க்க முடிகிறது?. இதுபோன்ற ரசிகர்களை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை" என்று தெரிவித்துள்ளார்.