காதலர் தினம்: இந்த 5 நாடுகளில் மட்டும் கொண்டாடினால் போச்சு - ஏன் தெரியுமா?
சில நாடுகளில் காதலர் தினம் கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளது.
காதலர் தினம்
பிப்ரவரி 14 ஆம் தேதி காதலர் தினம் உலகெங்கிலும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த தினத்தன்று காதலர்கள் ஒருவருக்கொருவர் தங்களின் அன்பை பல்வேறு வழிகளில் வெளிப்படுத்திக் கொள்வது வழக்கம்.
இந்நிலையில், குறிப்பிட்ட 5 நாடுகளில் மட்டும் காதலர் தினம் கொண்டாடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், மீறி கொண்டாடினால் கடுமையான தண்டனைகள் விதிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏன் தடை?
சவுதி அரேபியா தான் முதல் நாடாக காதலர் தினக் கொண்டாட்டத்திற்கு தடை விதித்தது. இளைஞர்கள் கெட்டுப்போய் விடுகிறார்கள் என்ற காரணத்தில் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதை மீறி கொண்டாடினால் உடனடியாக கைது செய்யப்படுவார்கள்.
மலேசியா ஒரு இஸ்லாமிய நாடு என்பதால், இங்கே காதலர் தினம் கொண்டாட அனுமதி இல்லை. இந்தக் கட்டுப்பாட்டை மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
பாபரின் பிறந்தநாளை பிப்ரவரி 14ம் தேதி கொண்டாடுவதால், உஸ்பெகிஸ்தானில் காதலர் தினம் தடை செய்யப்பட்டுள்ளது.
இஸ்லாமிய கொள்கைக்கு எதிரானது என்பதால் பாகிஸ்தானிலும் காதலர் தினத்தை கொண்டாடுவதில்லை.
காதலர் தினத்தை சீரழிவு விழாவாக ஈரான் அரசு அறிவித்துள்ளது. அங்கு பரிசுகள் மற்றும் பொருட்களை விற்பனை செய்வதையும் தடை செய்துள்ளது.