கர்ப்பமாக இருக்கேன்னு சொன்னப்போ..ஜீவி சொன்ன அந்த வார்த்தை - மனம் திறந்த சைந்தவி!

Tamil Cinema G V Prakash Kumar Divorce Saindhavi
By Sumathi May 16, 2024 02:30 PM GMT
Report

பாடகி சைந்தவி முன்னதாக அளித்த பேட்டி ஒன்று வைரலாகி வருகிறது.

சைந்தவி

தொட்டி ஜெயா, ஏபிசிடி, சரவணன், பட்டியல், பரமசிவன், ஆதி, வரலாறு, அழகிய தமிழ் மகன் உள்ளிட்ட பல படங்களில் சைந்தவி பின்னணிப் பாடல்களை பாடியுள்ளார்.

gv prakash - saindhavi

இதில், பல படங்களுக்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். 2013-ஆம் ஆண்டு ஜி.வி.பிரகாஷ் பெற்றோர்களின் சம்மதத்துடன் சைந்தவியை காதல் திருமணம் செய்துக்கொண்டார். தற்போது ஜிவி ஹீரோவாக களமிறங்கி நடித்து வருகிறார்.

இந்நிலையில், ஜி.வி. பிரகாஷ் மற்றும் சைந்தவி இருவரும் இனிமேல் சேர்ந்து வாழப் போவதில்லை என்று அறிவித்துள்ளனர். இந்த செய்தி தான் ஹாட் டாப்பிக்காக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் சைந்தவி முன்னதாக அளித்த பேட்டி ஒன்று வைரலாகி வருகிறது.

அதில், தான் முதன் முறையாக கருவுற்ற செய்தியை ஜீவி பிரகாஷ் இடம் கூறினேன். ஜீவி பிரகாஷிடம் எந்த ரியாக்ஷனையும் முதலில் என்னால் பார்க்க முடியவில்லை. எனது பிரக்னன்சி டெஸ்ட் கிட்டை காட்டி பாசிட்டிவாக வந்துள்ளது என்பதை ஜீ வி பிரகாஷிடம் கூறிய போது தூக்கத்தில் இருந்த

அப்போவே துரத்தியிருப்பாங்க.. கணவர் மாதிரி இருக்கமாட்டார் - சைந்தவி ஓபன்டாக்!

அப்போவே துரத்தியிருப்பாங்க.. கணவர் மாதிரி இருக்கமாட்டார் - சைந்தவி ஓபன்டாக்!

பேட்டி வைரல் 

அவர் இது என்ன தெர்மாமீட்டரா என கேட்டதோடு மட்டுமல்லாமல் பெட்ஷீட்டை இழுத்துப் போர்த்தி அசந்து தூங்கிவிட்டார். நானும் விடாமல் அந்த பிரக்னன்சி ஹிட் என்னுடையது. பேபி கன்ஃபார்ம் ஆகி உள்ளது என்று சொன்ன போதும் எதையும் காதில் வாங்காமல் தூங்குவதிலேயே நேரத்தை கடத்தினார்.

கர்ப்பமாக இருக்கேன்னு சொன்னப்போ..ஜீவி சொன்ன அந்த வார்த்தை - மனம் திறந்த சைந்தவி! | Saindhavi About Gv Prakash And Pregnancy

பின்னர் காலை எழுந்து வந்து காலங்காத்தாலே ஏதோ சொன்னயே கனவு மாறி இருந்தது மறுபடியும் சொல் என கூறினார். அப்போது மீண்டும் அந்த கிட்டை எடுத்துக்காட்டி காலையில் தான் நான் கர்ப்பமாக இருக்கிறேன் என்று சொன்னதை திரும்பச் சொல்லியும் அவர் நம்பவில்லை.

பின்னர் டாக்டரிடம் சென்று ஸ்கேன் செய்து அந்த ரிப்போர்ட்டை பார்த்த பின்பு தான் உன் வயித்துல நம்ம பாப்பா இருக்குன்னு ஹேப்பியானார் என உருக்கமாக பேசியுள்ளார்.