என் பொண்டாட்டி செத்துட்டாளா?.. உயிரோட இருக்கும்போதே இப்படி போடுறீங்களே - கடுப்பான நடிகர்!

Actors Tamil Actors
By Vinothini Nov 03, 2023 06:30 PM GMT
Report

பிரபல நடிகரின் மனைவி இறந்ததாக பரவியது குறித்து பேசியுள்ளார்.

நடிகர்

கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற ரூபரு மிஸ்டர். இந்தியா போட்டியில் பட்டம் வென்று தமிழகத்துக்கு பெருமை சேர்த்தவர் கோபிநாத் ரவி. இவர் பிரபுதேவா நடிப்பில் உருவாகியுள்ள ‘பகிரா’ படத்தில் முக்கியமான நெகட்டிவ் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்,

actor gopinath ravi about dr priya death news

மற்றொரு பெரிய படத்தில் முக்கிய வில்லன் கதாப்பாத்திரத்தில் நடிப்பதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இவர் கடந்த ஆண்டு சென்னையை சேர்ந்த டாக்டர்.பிரியா என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

இயக்குனர் 6 மாசம் அட்ஜஸ்ட்மென்ட் கேட்டார்.. நான் அதை எதிர்கல - பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை ஓபன் டாக்!

இயக்குனர் 6 மாசம் அட்ஜஸ்ட்மென்ட் கேட்டார்.. நான் அதை எதிர்கல - பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை ஓபன் டாக்!

பேட்டி

இந்நிலையில், மலையாளத்தில் சின்னத்திரையில் நடித்து பிரபலமான நடிகையும், மருத்துவருமான பிரியா 35 வயதில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார் என்று தகவல் வெளியானது.

actor gopinath ravi about dr priya death news

இது குறித்து மாடல் கோபிநாத் கூறுகையில், "என் மனைவி உயிரோடு தான் இருக்கிறாள்.. அது யாரோ மலையாள நடிகை இறந்துள்ளார். சோசியல் மீடியாவில் பிரியா என்று தேடியதும் டாக்டர் பிரியா என்று என் மனைவி புகைப்படம் வந்துள்ளது. அப்பொழுது இவர் கர்ப்பமாக இருக்கும்போது எடுத்த புகைப்படம், அதனை அந்த நடிகையுடன் கொலாஜ் செய்து போட்டுவிட்டனர்.

நான் அப்போ தான் வீட்டை விட்டு வெளியே சென்றேன். நிறைய பேர் எனக்கு கால் செய்து சாரி இந்த மாதிரி கேள்விப்பட்டேன்.. அப்படியெல்லாம் சொன்னதும் நான் அதிர்ச்சி ஆனேன். உடனே வீட்டிற்கு சென்று வெளியே காபி ஷாப் அழைத்து சென்று பேசிக்கொண்டிருந்தோம்.. இதை தெளிவுபடுத்த தான் இந்த இண்டர்வீயூ குடுத்தேன்" என்று கூறியுள்ளார்.