பேசாம நீங்களே அவரை கல்யாணம் பண்ணியிருக்கலாம்.. குஷ்பூவிடம் புலம்பிய பிரபல நடிகரின் மனைவி..!
நடிகை குஷ்பூ
தமிழ் சினிமாவின் 90-களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை குஷ்பூ. தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் போன்ற மொழிப் படங்களிலும் நடித்து முன்னனி நடிகையாக உச்சம் பெற்றார் குஷ்பூ. இவர் ரஜினி, கமல், சத்யராஜ், கார்த்திக், பிரபு போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து மக்கள் மத்தியில் இன்று வரை நீங்கா இடம் பிடித்து வருகிறார்.
எந்த நடிகைக்கும் அமையாத அளவுக்கு நடிகை குஷ்புவிற்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். குஷ்பூவிற்கு கோயில் கட்டும் அளவிற்கு தமிழ்நாட்டில் ரசிகர்கள் ஏராளம். நடிகை குஷ்பூ, இயக்குனர் சுந்தர்.சி யை திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையில் செட்டிலாகிவிட்டார். 2 மகள்கள் உள்ளனர்.
கமல் மீது பாசம்
தமிழ் சினிமாவில் குஷ்பூவையும், நடிகர் பிரபுவையும் இணைத்து ரசிகர்கள் ரசித்தனர். அந்த அளவிற்கு இவர்களின் இருவரிடம் இடையே இருக்கும் கெமிஸ்ட்ரி வேலை செய்தது. ஆனால் குஷ்பூவிற்கு பிடித்த நடிகர் கமல்தானாம்.
எல்லா நடிகர்களுடனும் சேர்ந்து நடித்துள்ளேன். ஆனால் கமலை பார்த்தால் மட்டும் கூடுதல் பாசம் எனக்கு இருக்கும். அந்த அளவுக்கு கமல் மீது மரியாதை கலந்த பிரியம் உள்ளது என்று குஷ்பூவே பேட்டிகளில் கூறியிருக்கிறார்.
புலம்பிய பிரபல நடிகரின் மனைவி
நடிகை குஷ்பூ ஹிந்தியில் பிரபல நடிகராக வலம் வந்த கோவிந்தாவை மிகவும் பிடிக்குமாம். குஷ்பூவிற்கு நடிகர் கோவிந்தா மீது ஒரு தனி கிரஷ் இருந்து வந்ததாம். குஷ்பூவும், கோவிந்தாவும் சேர்ந்து படத்தில் நடித்துள்ளனர்.
அந்த நேரத்தில் கோவிந்தாவுடன் ஒரே காரில் பயணிப்பது, ஒன்றாக சூட்டிங் போவது என குஷ்பூ நெருக்கமான நட்புறவுடன் இருந்துள்ளார்.
அதனால் இப்பொழுதும் கோவிந்தாவின் மனைவி குஷ்புவை பார்த்தாலும் ஒரே ஒரு கேள்வி கேட்பாராம். பேசாமல் நீங்களே அவரை கல்யாணம் பண்ணியிருக்கலாம். இவர் தொல்லை தாங்க முடியலைன்னு குஷ்பூவிடம் சொல்லுவாராம். அப்போது குஷ்பூ சிரித்துவிடுவாராம்.