நடிகர் தாமுவால் தேம்பி தேம்பி அழுத போலீஸ்காரர்கள் - அப்படி என்ன செஞ்சாருனு பாருங்க!
காவலர்களை நடிகர் தாமு அழ வைத்துள்ள சம்பவம் வைரலாகி வருகிறது.
நடிகர் தாமு
சென்னை அரும்பாக்கத்தில், 1993ம் ஆண்டு காவல் பணியில் சேர்ந்தவர்களின் 30ம் ஆண்டு நிறைவு விழாவையொட்டி, சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகர் தாமு கலந்துகொண்டார். மேலும், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 120 காவலர்கள் கலந்துகொண்டனர்.
சந்திப்பு நிகழ்ச்சி
தொடர்ந்து, தாமு மிமிக்ரி செய்து காவலர்களை சிரிப்பலையில் ஆழ்த்தினார். அவரது உருக்கமான உரையாடல் அனைவரையும் தேம்பி தேம்பி அழவைத்தது.
இதுகுறித்து அவர் பேசுகையில், “90 வயது ஆளாக இருந்தாலும் சரி, 93 வயது ஆளாக இருந்தாலும் சரி அல்லது 9வது மாணவனாக இருந்தாலும் சரி அவர்களது தாய், தந்தையை நினைக்கும்போது கண்டிப்பாக அழுகை வரும்” எனத் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சி மூலம், காவலர்கள் மன அழுத்தத்தில் இருந்து விடுபட்டதாக தெரிவித்துள்ளனர். இதுதொடர்பான புகைப்படங்கள் வெளியாகி கவனம் பெற்று வருகிறது.