நடிகர் தாமுவின் உருக்கமான பேச்சு.. தேம்பி தேம்பி அழுத பெண் போலீஸ் - அரங்கமே ஸ்தம்பித்தது!

Tamil nadu Ariyalur
By Vinothini Aug 12, 2023 10:13 AM GMT
Report

பெண் காவலர் ஒருவரை நடிகர் தாமுவின் பேச்சால் கதறி அழுத சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழிப்புணர்வு நிகழ்ச்சி

அரியலூர் மாவட்டம், கொளத்தூர் மாவட்டத்தில் 'போதை ஒழியட்டும், பாதை ஒளிரட்டும்' என்ற தலைப்பில் ஐ.சி.எப் அம்பேத்கர் மன்றத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 6 அரசு பள்ளிகளை சேர்ந்த 1200 மாணவர்கள் ஆசிரியல்கள் மற்றும் பாதுகாப்பு போலீசார் கலந்துகொண்டனர்.

women-police-cried-after-hearing-dhamu-speech

இதில் சிறப்பு விருந்தினராக திரைப்பட நடிகர் தாமு கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். இவர் போதை பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்தும் அதனை தடுக்கும் வழிமுறைகள் குறித்தும் மிமிக்ரி மூலமாக பேசினார்.

அழுத பெண் போலீஸ்

இதனை தொடர்ந்து, அவர் பேசுகையில், "தாய் தந்தையே ஹீரோ. எங்களைப் போன்ற நடிகர்களின் கட் அவுட்டுகளுக்கெல்லாம் பால் ஊற்றாதீர்கள். உங்கள் வாழ்வு சிறக்க வழி ஏற்படுத்தி கொடுத்தது பெற்றோர்கள், பேராசிரியர்கள் மட்டுமே. நடிகர்களின் பிறந்த நாளைக் கொண்டாடாமல் பேராசிரியர்களைக் கொண்டாடுங்கள்.

women-police-cried-after-hearing-dhamu-speech

பிறப்பு முதல் கல்லூரி பருவம் வரை பிள்ளைகளைப் பாதுகாப்பது பெற்றோர்களே" என்று கூறினார். இவரது இந்த பேச்சை கேட்ட மாணவர்கள், ஆசிரியர்கள் என அனைவரும் கண் கலங்கினர்.

மேலும், அங்கு இருந்த ஒரு பெண் போலீசார் தேம்பி தேம்பி அழுதது நடிகர் தாமு உட்பட அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. இது குறித்த வீடியோ தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.