மாரடைப்பால் மயங்கி விழுந்த நபர்... - சிபிஆர் கொடுத்து உயிரைக் காப்பாற்றிய பெண் காவலர்...! வைரல் வீடியோ...!
மத்திய பிரதேசத்தில் மாரடைப்பால் மயங்கி விழுந்த நபருக்கு உடனடியாக சிபிஆர் கொடுத்து பெண் காவலர் ஒருவர் உயிரைக் காப்பாற்றியுள்ளார்.
உயிரைக் காப்பாற்றிய பெண் காவலர்
சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், மத்திய பிரதேசம், குவாலியரில் மாரடைப்பால் மயங்கி விழுந்த ஒருவரை, பெண் காவலர் சிபிஆர் கொடுத்து உயிரைக் காப்பாற்றினார்.
கோல் கா மந்திர் சந்திப்பில் 62 வயது ஓய்வுபெற்ற கணக்காளர் ஒருவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி தரையில் விழுந்தார். அப்போது, சம்பவ இடத்தில் இருந்த பெண் காவலர் சோனம் பராஷர், முதியவருக்கு சிபிஆர் கொடுத்தார். அப்போது, உயிர் பிழைத்த முதியவரை உடனடியாக போலீஸ் ஜீப்பில் ஏற்று மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
தற்போது, மருத்துவமனையில் முதியவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் அந்த பெண் காவலரை பாராட்டி கமெண்ட் செய்து வருகின்றனர்.