செல்வராகவன் கெட்ட கெட்ட வார்த்தையில் திட்டினாரு ...ஒரு மாதிரி ஆகிடுச்சு - மனமுடைந்த நடிகர்!

Tamil Cinema Selvaraghavan Tamil Actors
By Swetha May 10, 2024 07:30 PM GMT
Report

இயக்குனர் செல்வராகவன் ஷூட்டிங் ஸ்பாட்டில் எப்படி நடந்து கொள்வார் என்று நடிகர் பவா லட்சுமணன் பகிர்ந்துள்ளார்.

செல்வராகவன்  

இயக்குனரும், தயாரிப்பாளருமான கஸ்தூரி ராஜாவின் மூத்த மகனான செல்வராகவன். துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர். அந்த படம் பெரிதாக ஓடவில்லை என்றாலும் அவரது அடுத்தடுத்த படங்களில் செல்வராகவன் முக்கியமான இயக்குநராக மாறினார். இடையில் படங்கள் ஏதும் இயக்காமல் தற்போது நடிப்பில் கவனம் செலுத்து வருகிறார்.

செல்வராகவன் கெட்ட கெட்ட வார்த்தையில் திட்டினாரு ...ஒரு மாதிரி ஆகிடுச்சு - மனமுடைந்த நடிகர்! | Actor Bhava Lakshmanan Reveals Selvaraghavan

மேலும் ஆயிரத்தில் ஒருவன் 2 , 7ஜி ரெயின்போ காலனி 2 ஆகிய படங்களை விரைவில் இயக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். அவரது ஆரம்ப காலத்தில் இயக்கிய இரண்டாவது படமான காதல் கொண்டேன் திரைப்படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. அதில் இருந்து தனுஷ் ஒரு சிறந்த நடிகராகவும் செல்வராகவன் சிறந்த இயக்குநராகவும் வளர்ந்தனர்.

மாநாடு படக்குழுவிடம் மன்னிப்பு கேட்ட செல்வராகவன் - ஏன் தெரியுமா?

மாநாடு படக்குழுவிடம் மன்னிப்பு கேட்ட செல்வராகவன் - ஏன் தெரியுமா?

மனமுடைந்த நடிகர்

செல்வராகவன் கவனிக்கப்படும் இயக்குநராக மாறினார். அவரது இயக்கத்துக்கென்று பலர் ரசிகர்களாக மாறினர். அதன்படி அவரது படங்களும் அமைந்தன. 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், ஏழாம் உலகம், மயக்கம் என்ன என செல்வராகவனின் இயக்கத்தில் வெளியான படங்கள் அவரது ரசிகர்கள் மத்தியில் பெரிதும் கொண்டாடப்பட்டது.

செல்வராகவன் கெட்ட கெட்ட வார்த்தையில் திட்டினாரு ...ஒரு மாதிரி ஆகிடுச்சு - மனமுடைந்த நடிகர்! | Actor Bhava Lakshmanan Reveals Selvaraghavan

இந்த சூழலில் தான் செல்வராகவன் ஷூட்டிங் ஸ்பாட்டில் எப்படி நடந்து கொள்வார் என்று வடிவேலு, சந்தானம் உள்ளிட்டோருடன் நடித்திருக்கும் காமெடி நடிகர் பாவா லட்சுமணன் ஒரு பேட்டியில் வெளிப்படையாக பேசியிருந்தார். அதில், “புதுப்பேட்டை திரைப்படத்தில் நான் இரண்டு நாட்கள் நடித்தேன்.

ஆனால் எனக்கு நடிக்கவே தெரியவில்லை என செல்வராகவன் கூறிவிட்டார். அதுமட்டுமின்றி கெட்ட கெட்ட வார்த்தைகளில் அத்தனை பேர் முன்னாடி திட்டினார். எனக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது. இனியும் இதில் இருந்தால் சரியாக இருக்காது என்று நான் வெளியேறிவிட்டேன். செல்வராகவனின் உதவி இயக்குநராக இருப்பது கொடுமை. அவர் வருகிறார் என்றால் அனைவரும் ஓடிப்போய் ஒளிந்துகொள்வார்கள்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.