அவளால தான் எல்லாம் - செல்வா பைத்தியமாகி இருப்பான்..! கஸ்தூரி ராஜா எமோஷனல்!!
இயக்குனர் செல்வராகவன் குறித்து அவரின் தந்தையும் இயக்குனருமான கஸ்தூரி ராஜா தெரிவித்துள்ள கருத்துக்கள் கவனத்தை ஈர்த்துள்ளது.
செல்வராகவன்
இன்றளவும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ள இயக்குனராக இருப்பவர் செல்வராகவன். காதல் கொண்டேன், 7 ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன என பல தமிழ் சினிமாவின் முக்கிய திரைப்படத்தை இயக்கியிருக்கும் இவர் தற்போது நடிகராகவும் பரிமாறியுள்ளார்.
பரபரப்பான ஷூட்டிங்கிற்கு மத்தியிலும் 7ஜி ரெயின்போ காலனி படத்தின் இரண்டத்தின் பாகத்தின் முதற்கட்ட பணிகளிலும் அவர் மும்முரம் காட்டியுள்ளார்.
பைத்தியமாகியிருப்பான்
இந்நிலையில், தான் தற்போது செல்வராகவன் குறித்து அவரின் தந்தை கஸ்தூரி ராஜா பேட்டி ஒன்றில் கருத்துக்கள் சிலவற்றை தெரிவித்துள்ளார்.
அந்த பேட்டியில், கீதாஞ்சலி (செல்வராகவனின் 2-வது மனைவி) வருகைக்கு முன்பு செல்வா ஒரு மெஷின் போல இருந்ததாக கூறி, அப்படியே விட்டுருந்தால் அவர் பைத்தியமாகி இருப்பார் என கூறினார். ஆனால், கீதாஞ்சலி மற்றும் 3 குழந்தைகளின் வருகைக்கு பிறகு அவர் முற்றிலுமாக மாறியுள்ளார் என்றும் அந்த பேட்டியில் குறிப்பிட்டார்.