மாநாடு படக்குழுவிடம் மன்னிப்பு கேட்ட செல்வராகவன் - ஏன் தெரியுமா?
வெங்கட் பிரபு இயக்கத்தில், சிம்பு நடித்து வெளிவந்த படம் மாநாடு. பல தடைகளை தாண்டி வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
மாநாடு வெற்றியையடுத்து, சிம்புவின் க்ராஃப் ஏற தொடங்கி இருக்கிறது. பல தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் சிம்புவின் கால்ஷீட் கேட்டு படையெடுக்கத் தொடங்கி இருக்கிறார்கள்.
இதனால் அவரது ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். படத்தை பார்த்த ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலகினரும் மாநாடு படத்திற்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இயக்குநர் செல்வராகவன் மாநாடு படக்குழுவிடம் மன்னிப்பு கேட்டிருக்கிறார்.
இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், தாமதமாய் ‘மாநாடு’ பார்த்ததிற்கு மன்னிக்கவும். ரசித்து பார்த்தேன். சிலம்பரன், எஸ்.ஜே. சூர்யா அருமை. நண்பர்கள் யுவன் ஷங்கர் ராஜா, வெங்கட் பிரபு மற்றும் படக்குழுவினருக்கு மனமார்ந்த வாழ்த்துகள். இது விடாமுயற்சிக்கும் அயராத உழைப்பிற்கும் கிடைத்த வெற்றி” என பதிவிட்டுள்ளார்.
தாமதமாய் “ மாநாடு “ பார்த்ததிற்கு மன்னிக்கவும். ரசித்து பார்த்தேன். !! @SilambarasanTR_ , @iam_SJSuryah அருமை. நண்பர்கள் @thisisysr @vp_offl மற்றும் படக் குழுவினர்க்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். இது விடாமுயற்சிக்கும் அயராத உழைப்பிற்கும் கிடைத்த வெற்றி !
— selvaraghavan (@selvaraghavan) December 28, 2021
உயர்கல்வி வாய்ப்புகளை தவறவிட்ட மாணவர்களுக்கு வட்டியில்லா கடன்! அரசாங்கத்தின் புதிய திட்டம் IBC Tamil
செவ்வாய் - சனி கேந்திர யோகம்: செப்டம்பர் மாதத்தின் முதல் நாளே அதிர்ஷ்ட யோகம் பெறும் ராசிகள்! Manithan