உன் மனைவி நான் பத்தி பேசவா? யாரு வேலைக்காரி - கொதித்த பாலா!
மனைவி குறித்து வந்த தகவலால் நடிகர் பாலா பத்திரிக்கையாளர்களை திட்டியுள்ளார்.
நடிகர் பாலா
இயக்குநர் சிறுத்தை சிவாவின் சகோதரர் நடிகர் பாலா. தமிழில் அன்பு, அப்பா அம்மா செல்லம், வீரம் உள்ளிட்ட படத்தில் நடித்துள்ளார். கடந்த அக்டோபர் மாதம் கோகிலா என்ற பெண்ணை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில் பாலா திடீரென வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், இன்று நாங்கள் இருவரும், வருத்தத்தில் இருக்கிறோம். அதற்கு காரணம் இந்த மீடியாக்கள் தான். அடுத்தவர்களின் மனைவியைப் பற்றி நீங்கள் எப்படி ஒரு தவறான செய்தியை எழுதலாம்.
என் மனைவி கோகிலா வேலைக்காரி என்றும், வேலைக்காரியின் மகள் என்று எழுதிருக்கிறீர்கள். இதுதான் மீடியாவின் தர்மமா? என் மனைவியை வேலைக்காரி என்று சொல்லும் உரிமையை உங்களுக்கு யார் கொடுத்தது. நீங்கள் என் மனைவி குறித்து பேசும் போது நான் உங்களுடைய மனைவியை குறித்து பேசட்டுமா?
செய்தியால் ஆதங்கம்
என் மனைவி கோகிலாவின் தந்தை பிரபலமான அரசியல் பிரமுகர். இது குறித்து நான் போலீசில் புகார் கொடுக்க சென்றேன். ஆனால், அவர் என்னை தடுத்துவிட்டு, நான் பார்த்துக்கொள்கிறேன் என்று கூறிவிட்டார். தவறான செய்தி ஒரு பத்திரிக்கையில் வந்தது, அந்த தவறான செய்தியை அனைத்து பத்திரிக்கைகளும் என் மனைவி குறித்து எழுதுகிறார்கள்.
நாங்கள் இருவரும் மகிழ்ச்சியாக இருப்பது யாருக்கோ பிடிக்கவில்லை என்பதால் இது போன்ற செய்தியை பரப்புகின்றனர். இந்த தவறான செய்தியை எழுதிய அந்த நபர் நிச்சயம் மன்னிப்பு கேட்க வேண்டும், அவர் மன்னிப்பு கேட்கும் வரை நான் சும்மா இருக்க மாட்டேன் என்று தெரிவித்துள்ளார்.