தவறான உறவு; இப்போதான் சந்தோஷமா இருக்கேன் - ஐஸ்வர்யா ராயுடனான பிரேக் அப் குறித்து விவேக் ஓபராய்
ஐஸ்வர்யா ராயுடனான பிரேக் அப் குறித்து விவேக் ஓபராய் மனம் திறந்துள்ளார்.
விவேக் ஓபராய்
பாலிவுட் திரை உலகில் சிறந்த நாயகனாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் விவேக் ஓபராய். இவர் நடிகை ஐஸ்வர்யா ராயை காதலித்து, நிச்சயதார்த்தம் வரை சென்று பல காரணங்களால் உறவு பாதியில் முறிந்ததாக செய்திகள் வெளியாகியது.
இந்நிலையில் விவேக் அளித்துள்ள பேட்டி ஒன்றில், செலிபிரிட்டி என்பதன் கொடுமை என்னவென்றால், உங்கள் காதல் முறிவு செய்தி எங்கும் பரவுகிறது. ஒருவரை விட்டு வெகு தூரம் தான் வந்துவிட்டேன். அந்தக் காதல் தோல்வி நேரத்தில் கடவுள் தனது பிரார்த்தனையை கேட்கவில்லை.
பிரேக் அப்
அதனால் தான் தற்போது மகிழ்ச்சியாக இருக்கிறேன். இப்போது ஐஸ்வர்யா ராய் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார். ஒரு நல்ல வாழ்க்கைத் துணையைக் கண்டுபிடித்திருக்கிறார். எனது சொந்த அனுபவத்தில் இருந்து சொல்கிறேன். சில நேரங்களில் நாம் தவறான உறவில் இருக்கிறோம்.
உங்களைப் பயன்படுத்தும் உறவில், அவர்கள் உங்களை மதிக்கமாட்டார்கள். உங்கள் சுய மதிப்பை நீங்கள் அங்கீகரிக்காததால் நீங்கள் அத்தகைய உறவில் விழுகிறீர்கள். ஒருவேளை நானும் ஒரு போலி நபராக மாறியிருக்கலாம். அவர் ஒரு போலி வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தார்.
பொய்யான புன்னகை கொண்ட மக்கள் மத்தியில் நானும் பொய்யானவனாக மாறியிருப்பேன். இப்போது மக்கள் என்னை ட்ரோல் செய்தால் எனக்கு கவலையில்லை. ஏனென்றால் வாழ்க்கையின் நோக்கம் எனக்குத் தெரியும் எனத் தெரிவித்துள்ளார்.