சிம்பு - நயன்தாரா பிரிய காரணமே ரஜினி தான் - போட்டுடைத்த இயக்குநர்!
சிம்பு - நயன்தாரா பிரிவு குறித்து இயக்குநர் நந்தக்குமார் தகவல் தெரிவித்துள்ளார்.
சிம்பு - நயன்தாரா
நடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவனின் திருமணம் ஆவணப்படமாக நெட்பிளிக்ஸ் தளத்தில் ஒளிபரப்பானது. இதில், நானும் ரவுடிதான் படத்தின் காட்சிகளை பயண்படுத்த தனுஷ் 10 கோடி கேட்டதாக நயன்தாரா குற்றம்சாட்டினார்.
தொடர்ந்து இதுதொடர்பாக தனுஷ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள இயக்குநர் நந்தவனம் நந்தக்குமார், நயன்தாராவும். விக்னேஷ் சிவனும் திருமணம் செய்து கொள்ளும் அளவிற்கு செல்வார்கள் என்று தனுஷ் அவர்கள் நிச்சயமாக நினைக்கவே இல்லை.
பிரித்த ரஜினி
ஏனென்றால் விக்னேஷ் சிவனை பற்றி அதிகமாக தெரிந்தவர் தனுஷ் என்பதால் இந்த திருமணம் நடக்காது, நடக்கக் கூடாது என்று நினைத்தார். ஆனால் அவர்கள் இருவரும், திருமண விஷயத்தில் உறுதியாக இருந்ததால் அவர்களின் திருமணம் நடந்து விட்டது.
இப்படித்தான் சிம்புவும் நயன்தாராவும் சேரக்கூடாது, சேர்ந்தால் சரியாக இருக்காது என நினைத்ததால் தான் நயன்தாராவை காப்பாற்றும் நோக்கத்தில் ரஜினிகாந்த் அவர்கள் காதலை பிரித்தார்.
ஆனால் விக்னேஷ் சிவன் நயன்தாரா விஷயத்தில் அவர்கள் இருவரும் காதலில் உறுதியாக இருந்ததால் அவர்களின் திருமணம் நடந்து விட்டது. இதுவே நயன்தாராவுக்கு திருமணம் ஆகாமல் இருந்திருந்தால் நிச்சயமாக தனுஷ் அவர்கள், நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்து இருக்க மாட்டார். இலவசமாகவே எடுத்துக் கொள்ளுங்கள் என்றுதான் சொல்லியிருப்பார் எனத் தெரிவித்துள்ளார்.