மார்பக புற்றுநோயோடு போராட்டம்; சிறுநீரக பையுடன்.. பிரபல நடிகை உருக்கம்!
சீரியல் நடிகை ஹினா கான் உருக்கமான பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.
நடிகை ஹினா கான்
இந்தி தொலைக்காட்சி சீரியல் நடிகை ஹினா கான். பிக் பாஸ் மற்றும் காட்ரான் கே கிலாடி உட்பட பல ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்றுள்ளார். ரிஷ்தா க்யா கெஹ்லதா ஹை என்ற தொலைக்காட்சி தொடரின் மூலம் பிரபலமானார்.
இந்நிலையில் தனது இன்ஸ்டாவில் போட்டோ ஒன்றை ஷேர் செய்துள்ளார். மருத்துவமனையில் நோயாளியின் உடையில் கையில் சிறுநீரக பையுடன் நடந்து செல்கிறார். அதில், நான் மூன்றாம் நிலை மார்பக புற்றுநோயால், பாதிக்கப்பட்டு இருக்கிறேன்.
புற்றுநோய் பாதிப்பு
இந்த நோயால் பாதிக்கப்பட்ட போதும், நான் நலமாக இருக்கிறேன்.நான் வலிமையாகவும், உறுதியாகவும், இந்த நோயைக் கடக்க முழுமையாக தயாராகி விட்டேன். தற்போது எனக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இருப்பினும், இந்த நோயில் இருந்து நான் முழுமையாக வெளியேறுவதற்கு தேவையான அனைத்தையும் செய்ய நான் தயாராக இருக்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பின், சிகிச்சைக்காக தனது தலைமுடியை வெட்டி வீடியோவை பகிர்ந்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் அவருக்கு ஆறுதல்களை தெரிவித்து வருகின்றனர்.