நடிகர் பவர் ஸ்டார் மருத்துவமனையில் அனுமதி - என்ன பாதிப்பு?
Tamil Cinema
Kidney Disease
By Sumathi
நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பவர்ஸ்டார்
தமிழில் கண்ணா லட்டு தின்ன ஆசையா திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் பவர் ஸ்டார் சீனிவாசன். தொடர்ந்து பல படங்களில் காமெடி கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில், திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு, சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சிறுநீரக கோளாறு
அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுநீரகத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளதாகவும் இதற்காக ஒரு வார காலம் மருத்துவமனையிலேயே தங்கி சிகிச்சையை மேற்கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளனர்.
தற்போது ஆசையா? தோசையா? என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.