Tuesday, May 13, 2025

வெற்றி துரைசாமி மரணம்; துக்கம் தாளாமல் நடிகர் அஜித் செய்த காரியம் - வைரல் Video!

Ajith Kumar Tamil Cinema Tamil nadu Actors Tamil Actors
By Jiyath a year ago
Report

வெற்றி துரைசாமி மறைவையொட்டி அவரது குடும்பத்தினருக்கு நடிகர் அஜித், தனது மனைவி ஷாலினியுடன் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்துள்ளார்.

வெற்றி துரைசாமி மறைவு

சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி. இவர் கடந்த 4-ம் தேதி தனது உதவியாளர் கோபிநாத்துடன் இமாச்சலப் பிரதேசத்திற்கு சென்றிருந்தார்.

வெற்றி துரைசாமி மரணம்; துக்கம் தாளாமல் நடிகர் அஜித் செய்த காரியம் - வைரல் Video! | Actor Ajithkumar Condolence To Vetri Duraisamy

அவர்கள் இருவரும் வாடகை கார் ஒன்றில் சென்று கொண்டிருந்தபோது அங்கிருந்த பள்ளத்தில் கவிழ்ந்து சட்லஜ் ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில், இமாச்சலப் பிரதேசத்தை சேர்ந்த கார் ஓட்டுநர் சடலமாகவும், கோபிநாத் காயங்களுடனும் மீட்கப்பட்டார்.

இந்த விபத்தில் மாயமான வெற்றி துரைசாமியை தேடும் பணி கடந்த 8 நாட்களாக தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில் நேற்று மீட்கப்பட்டது. பின்னர் அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

உங்கள் உழைப்பு உங்களுக்கு..! இயக்குநர் மணிகண்டனின் தேசிய விருதுகளை திருப்பி ஒப்படைத்த திருடர்கள்!

உங்கள் உழைப்பு உங்களுக்கு..! இயக்குநர் மணிகண்டனின் தேசிய விருதுகளை திருப்பி ஒப்படைத்த திருடர்கள்!

நடிகர் அஜித் ஆறுதல்

மேலும், வெற்றி துரைசாமியின் உடல் இன்று சென்னை கொண்டு வரப்பட்டு மாலை 5 மணி முதல் 6 மணி வரை சிஐடி நகரில் உள்ள இல்லத்தில் மக்கள் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.

வெற்றி துரைசாமி மரணம்; துக்கம் தாளாமல் நடிகர் அஜித் செய்த காரியம் - வைரல் Video! | Actor Ajithkumar Condolence To Vetri Duraisamy

இதனையடுத்து மாலை 6 மணிக்கு மேல் கண்ணம்மாபேட்டை மயானத்தில் தகனம் செய்யப்பட உள்ளது. இந்நிலையில் வெற்றி துரைசாமி மறைவுக்கு அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள், திரை பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

அந்தவகையில் அவரின் நெருங்கிய நண்பரான நடிகர் அஜித், தனது மனைவி ஷாலினியுடன் வெற்றி துரைசாமியின் வீட்டுக்கு நேரில் சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். வெற்றி துரைசாமி "என்றாவது ஒரு நாள்" என்ற படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.