சைதை துரைசாமியின் மகன் வெற்றி மறைவு - அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்!

Kamal Haasan M K Stalin Tamil nadu Edappadi K. Palaniswami Death
By Jiyath Feb 13, 2024 06:01 AM GMT
Report

வெற்றி துரைசாமி மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்

வெற்றி துரைசாமி 

சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி. இவர் கடந்த 4-ம் தேதி தனது உதவியாளர் கோபிநாத்துடன் சிம்லா, லடாக் பகுதிகளுக்கு சென்றிருந்தார்.

சைதை துரைசாமியின் மகன் வெற்றி மறைவு - அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்! | Vetri Duraisamy Death Political Leaders Mourn

அவர்கள் சிம்லா நோக்கி காரில் சென்று கொண்டிருந்தபோது அங்கிருந்த பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில், இமாச்சல பிரதேசத்தை சேர்ந்த கார் ஓட்டுநர் சடலமாகவும், கோபிநாத் காயங்களுடனும் மீட்கப்பட்டார். இந்த விபத்தில் மாயமான வெற்றி துரைசாமியை தேடும் பணி கடந்த 8 நாட்களாக தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில் நேற்று மீட்கப்பட்டது. பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. மேலும், வெற்றி துரைசாமியின் உடல் இன்று சென்னை கொண்டு வரப்பட்டு மாலை 5 மணி முதல் 6 மணி வரை சிஐடி நகரில் உள்ள இல்லத்தில் மக்கள் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது. இதனையடுத்து மாலை 6 மணிக்கு மேல் தியாகராயநகரில் உள்ள மயானத்தில் உடல் தகனம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வெற்றி துரைசாமி மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

அந்த வகையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் "சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் சைதை துரைசாமி மகன் வெற்றி துரைசாமி உயிரிழந்து, அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது குறித்த செய்தியைப் பார்த்து அதிர்ச்சியும் மிகுந்த வேதனையும் அடைந்தேன். எந்தவொரு தந்தையும் எதிர்கொள்ளக் கூடாத, எதிர்கொள்ள இயலாத துயரம் இது. உயிருக்கு உயிரான மகனை இழந்து தவிக்கும் சகோதரர் சைதை துரைசாமிக்கு இத்துயர்மிகு நேரத்தில் எனது இதயப்பூர்வமான ஆறுதலையும் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் "பெற்ற மகனை இழந்து வாடும் அன்புச் சகோதரர் திரு. சைதை துரைசாமி அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும். எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன், வெற்றி துரைசாமி அவர்களுடைய ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். இந்தத் துயரத்தைத் தாங்கிக் கொள்ளக்கூடிய சக்தியையும், தைரியத்தையும் சைதை துரைசாமி அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் அளிக்க, எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் தான் பேசியது என்ன..? வீடியோ வெளியிட்டார் ஆளுநர் ஆர்.என்.ரவி!

சட்டப்பேரவையில் தான் பேசியது என்ன..? வீடியோ வெளியிட்டார் ஆளுநர் ஆர்.என்.ரவி!

அரசியல் தலைவர்கள் இரங்கல் 

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் "முன்னாள் சென்னை மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி விபத்தில் சிக்கி உயிரிழந்த துயரச் சம்பவம் நடந்திருப்பது மிகவும் அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது.

சைதை துரைசாமியின் மகன் வெற்றி மறைவு - அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்! | Vetri Duraisamy Death Political Leaders Mourn

வெற்றியை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்" என தெரிவித்துள்ளார். முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் "அதிமுகவின் முன்னோடியும், சென்னை மாநகராட்சி முன்னாள் மேயருமான அன்புச் சகோதரர் திரு. சைதை ளு. துரைசாமி அவர்களின் மகன் திரு. வெற்றி துரைசாமி அவர்கள் இமாச்சல பிரதேச மாநிலத்தில் நிகழ்ந்த விபத்தில் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தார் என்ற செய்தியறிந்து ஆற்றொணாத் துயரமும், மன வேதனையும் அடைந்தேன். மகனை இழந்து தவிக்கும் அன்புச் சகோதரர் துரைசாமி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன். மகனின் இழப்பினைத் தாங்கிக் கொள்ளக்கூடிய சக்தியையும், தைரியத்தையும் அன்புச் சகோதரர் திரு. சைதை துரைசாமி அவர்களுக்கும், அவரது குடும்பத்தாருக்கும் அளிக்க எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் "சென்னையின் முன்னாள் மேயர், நண்பர் சைதை துரைசாமி அவர்களின் மகன் வெற்றி துரைசாமியின் மறைவுச் செய்தி மிகுந்த துயரத்துக்கு உள்ளாக்குகிறது. வாழத் தொடங்கும் வயதில் கம்பீரமாகத் தன் பணிகளைச் செய்துவந்த இளைஞர் இப்படியொரு விபத்தில் இறுதியை அடைந்தது எண்ணத் தாளாத துக்கம். மகனை இழந்து தவிக்கும் தந்தையை கனத்த மனத்தோடு ஆறுதல் கூறித் தழுவிக்கொள்கிறேன். அவர் விரைவில் இத்துயரிலிருந்து மீள வேண்டும் என்று தெரிவித்துள்ளார். .