ஹோட்டலில் வெற்றி துரைசாமி; பரபரப்பு சிசிடிவி காட்சிகள் - என்ன நடந்தது..?

Tamil nadu
By Jiyath Feb 08, 2024 11:13 AM GMT
Report

விபத்தில் சிக்கும் முன்பாக வெற்றி துரைசாமி உணவகம் ஒன்றுக்கு செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

விபத்து

சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி. இவர் கடந்த 4-ம் தேதி தனது உதவியாளர் கோபிநாத்துடன் சிம்லா, லடாக் பகுதிகளுக்கு சுற்றுலா சென்றுள்ளார்.

ஹோட்டலில் வெற்றி துரைசாமி; பரபரப்பு சிசிடிவி காட்சிகள் - என்ன நடந்தது..? | Vetri Duraisamy At Hotel Cctv Footage Released

சிம்லா நோக்கி காரில் சென்று கொண்டிருந்தபோது, இமாச்சல பிரதேசத்தை சேர்ந்த கார் ஓட்டுநருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய கார் அங்கிருந்த பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானது.

சிசிடிவி காட்சிகள் 

இதில் ஓட்டுநர் சடலமாகவும், கோபிநாத் காயங்களுடனும் மீட்கப்பட்டார். தற்போது மாயமான வெற்றி துரைசாமியை தேடும் பணிகள் நடைபெற்று வருகிறது.

ஹோட்டலில் வெற்றி துரைசாமி; பரபரப்பு சிசிடிவி காட்சிகள் - என்ன நடந்தது..? | Vetri Duraisamy At Hotel Cctv Footage Released

இந்நிலையில் விபத்தில் சிக்கும் முன்பாக வெற்றி துரைசாமி உணவகம் ஒன்றுக்கு செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. அதில் தனது உதவியாளருடன் வெற்றி துரைசாமி காரில் ஏறிச்செல்லும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.