அப்படி காட்சிகளில் நடிக்கும்போதெல்லாம் வீட்டுல ஒரே சண்டை - மனம் திறந்த நானி!
முத்த காட்சிகள் குறித்து நடிகர் நானி மனம் திறந்துள்ளார்.
நடிகர் நானி
தெலுங்கு சினிமாவில் முன்னனி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் நானி. வெப்பம் திரைப்படத்தின் மூலம் தமிழில் பிரபலமானார். மேலும் நடிகை சமந்தாவுடன் நானி, ஆஹா கல்யாணம், நிமிர்ந்து நில் போன்ற படங்களில் நடித்தார்.
இந்த படங்களை தொடர்ந்து அவர் பெரிதாக தமிழில் நடிக்க கமிட் ஆகவில்லை. சமீபமாக அவர் நடிக்கும் படங்களில் தொடர்ந்து லிப்லாக் சீன் இடம்பெறுகிறது. தற்போது அவர் நடித்துள்ள ஹாய் நன்னா படத்திலும் முத்தமிடும் காட்சி உள்ளது.
முத்த காட்சிகள்
இந்நிலையில், ஐதரபாத்தில் படவிழாவில் பங்கேற்ற அவர் இதுகுறித்து பேசுகையில், எனது எல்லா படத்திலும் முத்த காட்சிகள் இல்லை. சில படங்களில் மட்டும் இந்த மாதிரி காட்சிகள் இருக்கின்றன. அதுபோன்ற காட்சிகளில் நடிக்கும்போதெல்லாம் என் வீட்டில் தகராறு நடக்கிறது.
ஆனால் நான் ஒரு நடிகன். கதைக்கு தேவைப்படும்போது அது போன்ற காட்சியில் நடிக்கிறேன். எனது கடந்த காலத்து படங்களை பார்த்தால் உங்களுக்கு இந்த விஷயம் புரியும். சினிமாவிற்கு முத்த காட்சி அவசியம் என்று இருந்தால் மட்டுமே நடிப்பேனே தவிர விளம்பரத்துக்காக நடிக்க மாட்டேன்'' எனத் தெரிவித்துள்ளார்.