மேடையில் கதறி அழுத சாய் பல்லவி - கட்டியணைத்து தேற்றிய ஹீரோ

சாய் பல்லவி நானி ஷ்யாம் சிங்கா ராய் ShyamSinghaRoy
By Petchi Avudaiappan Dec 20, 2021 04:29 PM GMT
Report

 பட விழாவில் அழுத சாய் பல்லவியை கட்டிப்பிடித்து ஆறுதல்  நடிகர் நானிக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. 

ராகுல் சங்க்ரிதியான் இயக்கத்தில் நானி, சாய் பல்லவி, க்ரித்தி ஷெட்டி உள்ளிட்டோர் நடித்திருக்கும் ஷ்யாம் சிங்கா ராய் படத்தின் முன்னோட்ட வெளியீட்டு நிகழ்ச்சி ஹைதராபாத்தில் நடந்தது. 

விழா மேடையில் பேசிய இயக்குநர் ராகுல், சாய் பல்லவியின் நடிப்புத் திறமையை பாராட்டினார். அதை கேட்டு அரங்கில் இருந்த ரசிகர்கள் எல்லாம் சாய் பல்லவி சாய் பல்லவி என்று கோரஸாக கூச்சலிட்டனர். 

இதைக்கேட்டதும் எமோஷனலான சாய்பல்லவி அழுதார். அவரை அருகிலிருந்த நடிகர் நானி கட்டியணைத்து தேற்றினார். ஷ்யாம் சிங்கா ராய் படத்தில் தேவதாசியாக சாய் பல்லவி நடித்திருக்கிறார் . அந்த படம் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டிசம்பர் 24 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.