அப்பளம் போல் நொறுங்கிய கார்..துடி துடித்து உயிரிழந்த 4 பேர் - ECRரில் நடந்த கொடூர சம்பவம்!
சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் கோவளம் அருகே வாகன விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
கோவளம்
சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் அவ்வப்பொழுது சாலை விபத்துகள் ஏற்படுவ உண்டு. அப்படி மீண்டும் ஒரு கொடூரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.சென்னையிலிருந்து பாண்டிச்சேரி செல்லும் கிழக்குக் கடற்கரைச் சாலையில், கோவளம் அருகே நின்று கொண்டிருந்த சண்டைனர் வாகனம் நின்று கொண்டிருந்தது.
அந்த வழியாக அதி வேகமாக கார் ஒன்று சண்டைனர் வாகனம் மீது கார் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் கார் அப்பளம் போல் நொறுங்கியதால் ,பயணித்த ஓட்டுநர் உட்பட நான்கு பேர் சம்பவ இடத்திலேயே துடி துடித்து உயிரிழந்தனர்.
விபத்து
இந்தச் சம்பவம் குறித்துத் தகவலறிந்து வந்த கோவளம் காவல்துறையினர் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கோவளம் அருகே வாகன விபத்தில் 4 பேர் சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.