ஹோட்டலில் 13 வயது சிறுமியுடன் 17 வயது சிறுவன் - விசாரணையில் அதிர்ச்சி தகவல்!
13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாலியல் தொல்லை
சென்னை, ஈஞ்சம்பாக்கம் பொத்தேல் நகரைச் சேர்ந்த 13 வயது சிறுமி பாட்டியுடன் வசித்து வருகிறார். அதே பகுதியில் தனியார் பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
இந்நிலையில் வழக்கம்போல் பள்ளிக்குச் சென்ற சிறுமி நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் பாட்டி காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளார். அதன் அடிப்படையில், போலீஸார் பள்ளி அருகே இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அதில் அந்த மாணவி சுமார் ஒரு மணி நேரம் ஒரு சிறுவனுடன் பேசிக் கொண்டிருந்தது தெரியவந்தது. அதன்பின், சிறுவனின் செல்போன் எண்ணை கண்டுபிடித்துள்ளனர். அதில், அந்த சிறுவன் திருவான்மியூர் அருகே ஒரு விடுதியில் தங்கியிருந்தது தெரியவந்தது.
சிறுவன் கைது
தொடர் விசாரணையில், ஒரு சூப்பர் மார்க்கெட்டில் சிறுமி பார்ட் டைம் வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது இந்த சிறுவனுடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது. சிறுமி நாம் எங்காவது போய் திருமணம் செய்து கொண்டு வேலை செய்து பிழைத்துக் கொள்ளலாம் என அழைத்துள்ளார்.
தங்களுக்கு உதவி செய்ய வேண்டும் என சிறுவனுடன் பணிபுரிந்த ஒருவரிடம் கேட்ட போது அவர் இருவரையும் காலையில் ரயில் ஏற்றி அனுப்பி வைக்க உதவி செய்துள்ளார்.
மேலும், சிறுமியை மருத்துவப் பரிசோதனை செய்ததில் அவர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானது தெரியவந்தது.
இதனையடுத்து சம்பந்தப்பட்ட வட மாநில சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார்.