உ.பி-யில் அப்ரின் பாத்திமா வீடு இடிப்பு - போலீஸ் குவிப்பு..!

BJP Uttar Pradesh Yogi Adityanath
By Thahir Jun 12, 2022 10:29 AM GMT
Report

உத்தர பிரதேசத்தில் வெல்ஃபேர் பார்ட்டி ஆஃப் இந்தியாவின் தலைவரும், ஆர்வலர் அஃப்ரீன் பாத்திமாவின் தந்தையுமான ஜாவேத் முகமதுவின் வீட்டை அதிகாரிகள் இடிக்கத் தொடங்கியுள்ளனர்.

போராட்டம் 

கடந்த சில நாட்களுக்கு முன்பு நபிகள் நாயகம் குறித்து தனியார் தொலைக்காட்சியில் பாஜக செய்தி தொடர்பாளர் நுபுர் ஷர்மா இழிவாக பேசியிருந்தார்.

இந்த நிலையில் இதற்கு கண்டனம் தெரிவித்து உத்தர பிரதேசத்தில் உள்ள பிரயாக்ராஜில் வெள்ளிக்கிழமை போராட்டம் வெடித்தது.

போராட்டத்தில் வன்முறை வெடித்தது.இதில் வன்முறையை துாண்டியதாக 60க்கும் மேற்பட்ட சிறுவர்களை போலீசார் கைது செய்தனர்.

போராட்டத்தின் போது கல் வீச்சு,வாகனங்களுக்கு தீ வைப்பு நடந்தது.இதனால் காவல்துறையினர் தடியடி நடத்தினர்.

வீடு இடிப்பு

இந்நிலையில் போராட்டக்காரர்களில் ஒருவரான ஜாவேத் முகமதுவின் வீடு இடிக்கப்படும் என அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.

இந்நிலையில் மாணவர் ஆர்வலர் அப்ரீன் பாத்திமா, தனது பெற்றோரும் சகோதரியும் அநியாயமாக கடத்தப்பட்டு காவல்துறையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தேசிய மகளிர் ஆணையத்திடம் புகார் தெரிவித்துள்ளார்.

இந்திய வெல்ஃபேர் கட்சியின் தலைவரும், சிஏஏ எதிர்ப்புப் போராட்டங்களின் தலைவருமான ஜாவேத் முகமது, கடந்த வெள்ளிக்கிழமை அவரது இல்லத்தில் போலீசார் கைது செய்தனர்.

இந்த நிலையில் அவரது இல்லத்தை அதிகாரிகள் சட்டத்திற்கு புறம்பாக கட்டப்பட்டுள்ளதாக கூறி இடிக்க தொடங்கியு்ளளனர். இந்த வீடியோ காட்சிகளும் #StandWithAfreenFatima என்ற ஹேஸ்டேக்கும்  தற்போது ட்விட்டரில் டிரெண்டாகி வருகிறது.