நடக்க கூடாதது நடந்துவிட்டது : உக்ரைனில் இந்திய மாணவர் உயிரிழப்பு
கார்கிவ் நகரில் தாக்குதல் இந்திய மாணவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
உக்ரைனில் 6-வது நாளாக ரஷ்ய படைகள் உக்கிரமாக தாக்குதல் நடத்தி வருகின்றன.அந்த வகையில்,உக்ரைனில் உள்ள தெற்கு பிராந்தியத்தில் உள்ள கெர்சன் நகருக்குள் ரஷ்ய படைகள் நுழைந்துள்ளன.
இதனிடையே,உக்ரைன் தலைநகர் கீவ் பகுதியில் தாக்குதலை தீவிரப்படுத்த ரஷ்ய படைகள் ஆயத்தமாகி வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில்,உக்ரைனில் கார்கிவ் நகரில் உள்ள அரசு கட்டடங்களை குறி வைத்து ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்த நிலையில் உக்ரைனில் நடந்த தாக்குதலில் இந்திய மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

கார்கிவ் நகரம் மீது ரஷ்யா தீவிர தாக்குதல் நடத்தி வரும் நிலையில் அங்கிருந்து லிவிவ் நகருக்கு ரயிலில் செல்ல முயன்றபோது நடந்த தாக்குதலில் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த நவீன் என்ற மாணவர் உயிரிழந்துள்ளார். இவர் அங்கு எம்பிபிஎஸ் 4-ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார்.
எப்படியாவது உக்ரைனின் மேற்கு எல்லைக்கு சென்று வெளியேறலாம் என்று திட்டமிட்ட நிலையில் இந்த சோக சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவமானது இந்தியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
You May Like This
திரையுலகில் புதிய டிரெண்ட்... புதிய எலக்ட்ரிக் கார் வாங்கிய பிரபுதேவா! விலை எவ்வளவு தெரியுமா? Manithan
கடக ராசியில் வக்ர பெயர்ச்சியடையும் புதன் : இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! Manithan