இந்திய அணியின் தோல்விக்கு காரணமே இதுதான் - உண்மை உடைத்த அபிஷேக் நாயர்!
துணை பயிற்சியாளர் அபிஷேக் நாயர் தோல்வி குறித்து பேசியுள்ளார்.
இந்திய அணி தோல்வி
ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி டை மட்டுமே செய்தது. 2வது போட்டியில் இந்திய அணி வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்
இலங்கை அணி நிர்ணயத்த 241 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி 208 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. முதல் போட்டியிலும், இரண்டாவது போட்டியிலும் இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்டிங்கில் செய்யப்பட்ட மாற்றங்களே இந்த மோசமான நிலைக்கு காரணம் என ரசிகர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள துணைப் பயிற்சியாளர் அபிஷேக் நாயர், "இந்த தோல்வி அதிர்ச்சியா? எனக் கேட்டால் ஆம், இது அதிர்ச்சி தான். எங்களுக்கு இது ஆச்சரியமாக இருந்தது. ஆனால் இந்த சூழ்நிலையை நீங்கள் பார்த்தால் பந்து நன்றாக ஸ்பின்னானதால் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதை புரிந்து கொள்ளலாம்.
அபிஷேக் நாயர் பேட்டி
கடைசி போட்டியிலும் புதிய பந்தில் எளிதாக ரன் குவிக்க முடிந்தது. ஆனால், பந்து பழையதானவுடன் பேட்டிங் செய்வது கடினமாக இருந்தது." 50 ஓவர் போட்டிகளில் இது போன்ற கடினமான சூழ்நிலைகளில் தோல்விகள் ஏற்படலாம். இரண்டு முறை இதே போல நடக்க என்ன காரணம் என்பதை நாங்கள் புரிந்து கொண்டு அதை சரி செய்ய பார்க்கிறோம்.
மிடில் ஆர்டரில் நான்கு, ஐந்து மற்றும் ஆறாவது பேட்ஸ்மேன்கள் மாற்றப்பட்டதை பார்த்தால் உங்களுக்கு சில சந்தேகங்கள் எழக் கூடும். ஆனால் நாங்கள் இடது கை மற்றும் வலது கை வீரர்கள் ஒரே நேரத்தில் களத்தில் இருக்க வேண்டும் என்பதாலேயே இந்த மாற்றங்களை செய்தோம் எனத் தெரிவித்துள்ளார்.