2025 ஐபிஎல் - CSK அணிக்காக தோனி செய்ய உள்ள தியாகம்
2025 ஐபிஎல் தொடரில் யாரும் செய்ய முன் வராத தியாகத்தை சிஎஸ்கே அணிக்காக தோனி செய்ய முன் வந்துள்ளார்.
ஐபிஎல்
ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பெரிய அளவில் ரசிகர் பட்டாளம் உண்டு. 5 முறை கோப்பையை வென்றுள்ள சிஎஸ்கே அணி 2024 ஐபிஎல் தொடரில் பிளே ஆப் சுற்றுக்கு கூட தகுதி பெறாமல் வெளியேறியது.
இந்த நிலையில் 2025 தொடரில் கோப்பையை வென்றாக வேண்டும் என்ற உத்வேகத்துடன் சிஎஸ்கே அணி உள்ளது. தற்போது மெகா ஏலம் வர உள்ளதால் அதில் அணியில் உள்ள பல வீரர்கள் மாற்றப்படுவார்கள் என்பதால் மெகா ஏலத்தை சிஎஸ்கே போன்ற சில அணிகள் எதிர்க்கின்றன.
தோனி
5 வீரர்களை தக்க வைத்துக் கொண்டு, 3 வீரர்களை ரைட் டூ மேட்ச் கார்ட் மூலம் மீண்டும் தேர்வு செய்யும் முறையும் கொண்டு வர சொல்லி சிஎஸ்கே வலியுறுத்தி வருகிறது. பல வீரர்கள் ஐபிஎல் தொடரில் வரும் ஊதியத்தை வைத்தே சம்பாதிக்கலாம் என நினைக்கும் போது தோனி பெரிய தியாகத்தை செய்ய முன்வந்துள்ளார்.
மெகா எலத்தில், சர்வதேச போட்டியில் விளையாடாத வீரராக கருதி சம்பளத்தை பாதியாக குறைத்துக் கொள்ள தோனி முடிவெடுத்து இருக்கிறார். இதன் படி தோனியை குறைந்த விலைக்கு தக்க வைத்துக்கொண்டு எஞ்சியுள்ள பணத்தை வேறு இளம் வீரருக்கு பயன்படுத்த அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதனால் தோனியை சர்வதேச போட்டியில் விளையாடாத வீரராக கருத வேண்டும் என ஐபிஎல் நிர்வாகத்தை சிஎஸ்கே அணி கேட்டுக் கொண்டுள்ளது.