தெருவுல போய் உட்காரு.. பெண் பயணிகள் மீது தண்ணீரை ஊற்றி அட்டூழியம்!

Tiruppur
By Sumathi Oct 21, 2023 04:41 AM GMT
Report

பெண் பயணிகள் மீது தண்ணீர் ஊற்றி ஊழியர் அவமதித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆவின்

திருப்பூர், பழைய பேருந்து நிலையத்தில் ஆவின் பாலகம் ஒன்று செயல்பட்டு வந்தது. அந்த கடைக்கு முன்பு உள்ள நடைமேடை பகுதியில் பெண்கள் சிலர் அமர்ந்து பேருந்துக்காகக் காத்திருந்தனர்.

aavin tirupur

இதனைப் பார்த்த கடைக்காரர் அவர்களை எழுந்து போகச் சொல்லாமல் தண்ணீரைக் கொண்டு வந்து நடைமேடையில் ஊற்றியதோடு பெண்கள் மீதும் ஊற்றியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்த வீடியோ வெளியாகி வைரலாகியது.

அவமதிப்பு

அதில், பெண்கள் சிலர் 'ஏன் மேலே தண்ணீர் ஊற்றினீர்கள் எழுந்து போகச் சொன்னால் போயிருப்போமே' எனக் கேட்க, கடையின் உரிமையாளர் 'இந்த இடம் எங்களுக்குச் சொந்தமானது; நாங்கள் எடுத்துள்ளோம் இங்கு உட்காரக்கூடாது' எனப் பேசியிருந்தார்.

‘இங்கு வியாபாரம் செய்யக்கூடாது...’ - குறவர் இன பெண்கள் மீது தண்ணீர் ஊற்றி விரட்டிய வீடியோ வைரல்

‘இங்கு வியாபாரம் செய்யக்கூடாது...’ - குறவர் இன பெண்கள் மீது தண்ணீர் ஊற்றி விரட்டிய வீடியோ வைரல்

இதனைத் தொடர்ந்து, மாநகராட்சி அதிகாரிகள் பேருந்து நிலையத்தில் வரம்பை மீறிச் செயல்படும் கடைகளில் ஆய்வு நடத்தினர். மேலும், கடைக்கு வெளியே அத்துமீறி ஆக்கிரமித்து வைக்கப்பட்ட பொருட்களைப் பறிமுதல் செய்து மாநகராட்சி வண்டிகளில் ஏற்றிச் சென்றனர். சில கடைகளையும் இழுத்து மூடினர்.