பால்குடம், தீச்சட்டி எடுத்துச் சென்ற பக்தர்கள் மேல் தண்ணீர் ஊற்றி குளிர வைத்த இஸ்லாமியர் - குவியும் பாராட்டு
காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோவிலில் பங்குனி திருவிழா நடைபெறுகிறது. இந்த விழாவில் பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.
இந்நிலையில், தற்போது கோடைக்காலம் தொடங்கியுள்ளதால் வெயில் வாட்டி வதைக்கிறது.
காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில் விழாவுக்காக பால்குடம், தீச்சட்டி எடுத்து சென்ற பக்தர்களுக்கு வெயில் தாக்கம் அதிகரிக்காமல் இருக்க, பள்ளிவாசலிலிருந்து இஸ்லாமியர் ஒருவர் குழாய் மூலம் பக்தர்கள் மேல் தண்ணீர் ஊற்றி குளிர வைத்தார்.
அப்படி இவர் குழாய் மூலம் தண்ணீர் ஊற்றிக்கொண்டிருந்ததை அங்கிருந்தவர்கள் வீடியோவாக எடுத்து சமூகவலைத்தளத்தில் வெளியிட்டனர். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது. பலர் இந்த இஸ்லாமியரின் செயலுக்கு பாராட்டைத் தெரிவித்து வருகின்றனர்.