தண்ணீரால் ஒவ்வாமை?10 வருடம் குளிக்காத இளம்பெண் - ஷாக் சம்பவம்!
இளம்பெண் ஒருவர் தண்ணீர் ஒவ்வாமையால் 10 வருடம் குளிக்காமல் இருக்கும் சம்பவம் அதிர்ச்சி அளித்துள்ளது.
தண்ணீர் ஒவ்வாமை
அமெரிக்காவின் தென் கரோலினா பகுதியை சேர்ந்தவர் லோரன் மான்டெஃபுஸ்கோ. 22 வயது நிரம்பிய இவர் அக்குவாஜெனிக் யூர்டிகேரியாவால் (aquagenic urticaria) என்னும் அரிய வகை நோயால் பாதிக்கப்படுள்ளார்.
இதனால், தண்ணீரில் குளித்தாலோ அல்லது தொடர்பு கொண்டாலோ அப்பெண்ணின் உடல் சிவந்து கடுமையான அரிப்பு எற்பட்டு சுமார் ஒரு மணி நேரத்திக்கு தொடரும் என்பதால் கடந்த 10 வருடங்களாக அவர் குளிக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
உலகம் முழுவதும் ஏறதாழ 100 - 250 நபர்கள் இந்த அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஷாக் சம்பவம்
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண், குளிக்கும்போது அல்லது வேறு எந்த வழியிலும் தண்ணீருடன் தொடர்பு கொள்ளும்போது அரிப்பு ஒரு மணி நேரம் வரை நீடிக்கும். எனது தோலின் மேற்பரப்பிற்கு கீழே அரிப்பு ஆழமாக இருப்பது போல் உணர்கிறேன்.
நமைச்சல் ஏற்படாமல் இருக்க நான் கடினமாக முயற்சி செய்கிறேன், ஆனால் என்னால் அதனை கட்டுப்படுத்த முடியாது அதனை தணிக்க வழி இல்லை. 12 வயதாக இருந்தபோது இதை முதலில் கவனித்தேன் இருப்பினும், அது பல ஆண்டுகளாக மோசமாகிவிட்டது.
மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மருத்துவரிடம் சென்றேன். அங்கு என்னுடைய நோயின் நிலை அடையாளம் காணப்பட்டது.
இந்த ஒவ்வமையை குணப்படுத்த எந்த சிகிச்சையும் அறியப்படவில்லை. கடல், குளம், கண்ணீர், வியர்வை மற்றும் குளிர்ந்த காற்றுக்கூட வலியை அதிகரிக்கும் என்பதால் முடிந்தவரை விரைவாக உடைகளை மாற்றுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.