பிஸ்கெட் சாப்பிட்ட இளம்பெண் உயிரிழப்பு; உடல் முழுவதும் அலர்ஜி - என்ன காரணம்?
பிஸ்கட்டை சாப்பிட்ட இளம்பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேர்க்கடலை அலர்ஜி
இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர் ஓர்லா பாக்செண்டேல்(25). பாலே நடனக் கலைஞராக இருந்துள்ளார். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் வசித்து வந்துள்ளார். அங்கு கனெக்டிகட் என்ற பகுதியில் உள்ள கடைக்குச் சென்று பிஸ்கட் பாக்கெட் ஒன்றை வாங்கியுள்ளார்.
இவர் கடுமையான வேர்க்கடலை அலர்ஜியுடன் அவதிப்பட்டு வந்துள்ளார். அந்த பிஸ்கட் பாக்கெட்டில் வேர்க்கடலை இருக்கிறது என்று எதுவும் குறிப்பிடப்படவில்லை. வெண்ணிலா பிஸ்கட் என்று மட்டும் குறிப்பிட்டிருந்த நிலையில் அதனை சாப்பிட்டுள்ளார்.
இளம்பெண் பலி
இந்நிலையில், எதிர்பாராத விதமாக வேர்க்கடலை சாப்பிட்டால் ஏற்படும் அலர்ஜியை சமாளிக்கும் எபிபென் ஊசியை எப்போதும் அவர் உடன் வைத்திருந்துள்ளார். அந்த வகையில் அதனை பயன்படுத்திய போதிலும், உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து அந்த பிஸ்கட்டை தயாரித்த சம்பந்தப்பட்ட நிறுவனம் தனது வெண்ணிலா குக்கீகளை திரும்பப் பெற்றுள்ளது. மேலும், தனது பிஸ்கட்களில் முட்டை மற்றும் வேர்க்கடலை இருப்பதை ஒத்துக்கொண்டுள்ளது.
வேர்க்கடலை அலர்ஜி இருப்பவர்கள் தங்கள் பிஸ்கட்டை சாப்பிட்டால் மோசமான அலர்ஜி ஏற்படும். இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.