பாஜக தலைவர் மீது பிரபல நடிகை பரபரப்பு புகார்!
பாஜக பெண் தலைவர் சித்ரா கிஷோர் வாக் மீது நடிகை புகார் அளித்துள்ளார்.
ஆடை விமர்சனம்
மகாராஷ்டிர பாஜக பெண் தலைவர் சித்ரா கிஷோர் வாக் ட்விட்டரில் நடிகை உர்ஃபி ஜாவேத் தனது ஆடை அணிவிற்காக கடுமையாக விமர்சித்தார். அதில், "செயல்கள் தேவையில்லை.. பொது இடங்களில் நிர்வாணமாக நடப்பது தான் நமது மகாராஷ்டிராவின் கலாச்சாரமா?
மும்பையில் உள்ள பார் ரோட்டில் மிகவும் கேவலமாக இருக்கும் உர்ஃபியின் உடலை மகளிர் ஆணையம் ஆதரிக்கிறதா?" என கேள்வி எழுப்பினார். மேலும் மும்பை போலீஸிலும் புகார் அளித்தார்.
நடிகை புகார்
இந்நிலையில், பிக் பாஸ் ஓடிடி புகழ் உர்ஃபி ஜாவேத், இதுகுறித்து மகளிர் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளார். அதில், "பாஜக தலைவர் சித்ரா வாக்கின் இத்தகைய பொது தூண்டுதலுக்குப் பிறகு, நடிகை உர்ஃபியின் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது.
ஏனெனில் அவர் கும்பலால் அடித்துக்கொலை செய்யப்படலாம். எனவே அவரது நல்வாழ்வுக்காக அவருக்கு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்" என்று ஜாவேத்தின் வழக்கறிஞர் நிதின் சத்புதே தெரிவித்துள்ளார்.