ஓடும் ரயிலில் ரீல்ஸ் எடுத்த இளம்பெண்..நொடியில் நடந்த கொடூரம் -வெளியான பகீர் CCTV
ஓடும் ரயிலில் ரீல்ஸ் எடுக்க முயன்ற போது இளம் பெண் ஒருவர் படிக்கட்டில் தவறி விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஓடும் ரயில்
இணைய உலகில் நாம் இருக்கிறோம் என்ற சொல் புலக்கத்திலிருந்து அகன்று தற்போது நாம் இன்ஸ்டா உலகத்தில் இருக்கிறோம் என்ற சொல் வழக்கத்திற்கு வந்துள்ள அளவுக்கு, இன்ஸ்டா போஸ்டுகளும் இன்ஸ்டா ரீல்ஸ்களும் தற்போது பிரபலமடைந்துள்ளன.
ஆனால் இதன் மூலம் சமூக வலைத்தள பயனர்கள் ரீல்ஸ் மோகத்தில் எந்த எல்லைக்கும் செல்லும் நிலைக்குச் சென்றுள்ளனர். சில சமயங்களில் மற்றவர்களின் உயிரை ஆபத்தில் ஆழ்த்துவதையும் கூட பார்க்க முடிகிறது.
அந்த வகையில் ஓடும் ரயிலில் ரீல்ஸ் எடுக்க முயன்ற போது இளம் பெண் ஒருவர் படிக்கட்டில் தவறி விழுந்த வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில், சீனப் பெண் ஒருவர்,இலங்கைக்குச் சுற்றுலா சென்றதாகத் தெரிகிறது.
ரீல்ஸ்
அப்போது ரயிலில் சென்றுகொண்டிருக்கும் போது ரயிலின் படிக்கட்டுக்கு அருகே நின்று, தன்னை மறந்து ரீல்ஸ்-காக கீழே தொங்குவதுபோல போஸ் கொடுத்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக மரத்தில் அடிபட்டு கீழே விழுந்துள்ளார்.
இதனைக் கண்ட உடனிருந்தவர் அலறி கூச்சலிட்டுள்ளார்.அதன் பிறகு ரயில் நிறுத்தப்பட்டு அந்த இளம் பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.