அடேங்கப்பா 50 வருட Friendship.. ரீ கிரியேட் செய்த தோழிகள் - இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!
50 வருஷ ப்ரெண்ட்ஷிப் ரீ கிரியேட் செய்த தோழிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
ப்ரெண்ட்ஷிப்
சினிமாவில் ஹிட்டாகும் பாடலை ரீ-கிரியேட் செய்து ரீல்ஸ் வெளியிட்டு சோஷியல் மீடியா பிரபலங்கள் புகழ் தேடி கொள்கின்றனர்.அதுமட்டுமில்லாமல் குடும்ப உறுப்பினர்களுடன் நாம் சிறு வயது புகைப்படங்கள் எடுத்து இருப்போம்.
அதனை இன்றைய வளர்ந்து வரும் தொழில்நுட்பம் மூலம் ரீ-கிரியேட் செய்யப்பட்டு வருகிறது. அதுமட்டுமில்லாம பழைய புகைப்படத்தை போன்று உடை அணிந்து எடுத்துகொள்வது வழக்கம்.அந்த வகையில் 50 வருஷ ப்ரெண்ட்ஷிப்தோழிகள் ரீ கிரியேட் செய்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 1972ஆம் ஆண்டு இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த தோழிகள் 4 பேர் பள்ளியில் படிக்கும் போது டாவோஸுக்கு சுற்றுலா சென்றுள்ளனர். அப்போது அவர்கள் நான்கு பேரும் கைகோர்த்து தங்களது புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளனர். அப்போது அவர்களுக்கு வயது 16, 17 இருக்கும் எனக் கூறப்படுகிறது.
ரீ-கிரியேட்
இந்த நிலையில், தற்போது 4 பேருமே 70 வயதை அடைந்துள்ளனர். இப்போது வரை நான்கு பேரும் நெருங்கிய தோழிகளாக இருந்து வருகின்றனர்.இவர்களது நட்பு சுமார் 50 ஆண்டுகள் கடந்ததை நினைவு கூறும் விதமாக நான்கு தோழிகளும் டாவோஸுக்கு சென்றனர்.
பள்ளியில் படிக்கும் போது எடுத்த புகைப்படத்தில் அணிந்திருந்த அதே கலர் உடைகளை அணிந்துக் கொண்டு அதே வரிசையில் மீண்டும் மனசுக்குள் தங்களது இளமையான நினைவுகளைக் கொண்டு வந்து புகைப்படம் எடுத்துள்ளனர்.அந்த புகைப்படம் இணையத்தில் தற்பொழுது வைரலாகி வருகிறது.