5 ஆயிரம் கி.மீ கடந்து டேட்டிங்; காதலர் செய்த காரியம் - பெண் எடுத்த ஷாக் முடிவு!
பெண் ஒருவர் 5 ஆயிரம் கி.மீ பயணித்து டேட்டிங் செய்யும் தனது காதலனை நிராகரித்த சம்பவம் அதிர்ச்சி அளித்துள்ளது.
டேட்டிங்
இன்றைய காலகட்டத்தில் ஒருவருடன் நட்பை தொடங்கவும், ஒரு புதிய உறவை தேடவும் மற்றும் அந்த நட்பை புதுப்பிக்கவும் தற்போது பல சமூக வலைதளங்கள் மற்றும் இணையதளங்கள் குவிந்து உள்ளன.
இதில் ஒருவருக்கொருவர் நன்கு பழகி புரிந்து கொள்ள நல்ல வழிகாட்டியாக நிகழ்கிறது, அதையும் தாண்டி சிலர் நேரில் நட்பு கொள்ள முயற்சி செய்கின்றனர்.
ஷாக் முடிவு
அதன்படி, லண்டனைச் சேர்ந்த பெண் ஒருவர், சான் பிரான்சிஸ்கோ வரை சுமார் 5 ஆயிரம் கி.மீ பயணித்து, ஒரு ஆணுடன் டேட்டிங் செய்ய சென்றுள்ளார்.
அங்கு நேரில் சென்று பேசும்போதுதான் தெரிந்தது, அந்த நபர் தன்னைவிடவும் செல்போனில் அதிக நேரம் செலவிடுகிறார் என்றும், அவர் தனக்கேற்றவர் இல்லை என்று டேட்டிங்ப்போன பெண்ணுக்கு புரிந்தது.
இதனை காராணம் காட்டி அந்த பெண் அவருடன் நண்பராக இருக்க முடிவெடுத்து, அதை அவரிடமும் தெரிவித்துவிட்டு லண்டனுக்கே திரும்பி சென்று விட்டார்.
இந்த சம்பவம் குறித்து சமூக வலைத்தளத்தில் பலரும் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.