மன்சூர் அலிகான் தலைவர் பதவி நீக்கம்; இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சி அதிரடி முடிவு! என்ன காரணம்?

Tamil nadu Mansoor Ali Khan Election
By Swetha Mar 16, 2024 04:32 AM GMT
Report

இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து நடிகர் மன்சூர் அலிகான் நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மன்சூர் அலிகான்

நடிகர் மன்சூர் அலிகான் இந்திய ஜனநாயகப் புலிகள் என்ற கட்சியில் தலைவர் பொறுப்பில் இருந்தார். தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், ஆரணியில் போட்டியிடப் போவதாக அவர் அறிவித்திருந்தார்.

மன்சூர் அலிகான் தலைவர் பதவி நீக்கம்; இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சி அதிரடி முடிவு! என்ன காரணம்? | Mansoor Ali Khan Was Removed From The Party

ஆனால் திடீரென அதிமுக நிர்வாகிகளுடன் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இருப்பினும், தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சியின் அவசர செயற்குழு கூட்டம் திடீரென நேற்று நடைபெற்றது. அதில், தலைவர் பதவியில் இருந்து மன்சூர் அலிகானை நீக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது. தலைவருக்கு இருந்த அதிகாரங்கள் பொதுச்செயலாளர் கண்ணதாசனுக்கு வழங்கப்பட்டு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அறிவியல் படிக்காமல் அறியாமையைப் பகிர்ந்து கொள்கிறார் - சமந்தா குறித்து மருத்துவர் குற்றச்சாட்டு!

அறிவியல் படிக்காமல் அறியாமையைப் பகிர்ந்து கொள்கிறார் - சமந்தா குறித்து மருத்துவர் குற்றச்சாட்டு!

என்ன காரணம்?

இது குறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் கண்ணதாசன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார், "வளசரவாக்கத்தில் நடந்த செயற்குழு கூட்டத்தில் கூட்டணி தொடர்பான முடிவுகளை எடுக்கும் அதிகாரம் பொதுச்செயலாளருக்கு மாற்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், மன்சூர் அலிகான் தேர்தல் நெருங்கும் போதெல்லாம் புதிது புதிதாக கட்சி ஆரம்பிக்கிறார்.

மன்சூர் அலிகான் தலைவர் பதவி நீக்கம்; இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சி அதிரடி முடிவு! என்ன காரணம்? | Mansoor Ali Khan Was Removed From The Party

பிறகு காணாமல் போகிறார். ஆனால், நாங்கள் தேர்தலைக் கடந்தும் இருக்க வேண்டும் என்ற நினைப்பவர்கள். இதன் காரணமாகவே இந்த முடிவை எடுத்துள்ளோம். அவர் தானாகவே முடிவுகளை எடுக்கிறார். யாரோ சொல்லும் தகவல்களை எல்லாம் வைத்து முடிவு எடுக்கிறார். நிர்வாகிகளுடன் எந்தவொரு முடிவு குறித்தும் ஆலோசிப்பதில்லை.

வாய்க்கு வந்ததை ஊடகங்களில் பேசிவிட்டு செல்கிறார். இந்தக் காலத்தில் சரியான முடிவை எடுக்க வேண்டும். அப்போது தான் வரும் காலத்தில் கட்சியால் தொடர்ந்து செயல்பட முடியும். இதன் காரணமாகவே அவரை கட்சியின் தலைவர் பதவியில் இருந்து நீக்க ஒரு மனதாக முடிவு செய்தோம். இப்போதைக்குப் பொதுச்செயலாளருக்கு அனைத்து அதிகாரமும் மாற்றப்பட்டுள்ளது" இவ்வாறு தெரிவித்துள்ளார்.