புதுமைப்பெண் திட்டம்; இனி மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 - அரசாணை வெளியீடு !

M K Stalin Government Of India
By Swetha Mar 16, 2024 06:44 AM GMT
Report

அரசு உதவி பெரும் மாணவிகளுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் வழங்க தமிழக அரசு அரசனை வெளியிட்டது.

புதுமைப்பெண் திட்டம்

உயர் கல்வி பயில வேண்டும் என்று எண்ணும் ஏழை மாணவிகளை கருத்திற்கொண்டு தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் முக்கியமானது தான் புதுமைப்பெண் திட்டம.

புதுமைப்பெண் திட்டம்; இனி மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 - அரசாணை வெளியீடு ! | 1000 To Schoolgirls Receiving Government Aid

இந்த திட்டத்தின் மூலம், 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் பயின்று, தமிழ்நாட்டில் உயர்கல்வி பயிலும் மாணவிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயின்று, 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் படித்த மாணவிகளும் இத்திட்டத்தின் கீழ் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.

தமிழ்நாட்டில் கோபிமஞ்சூரியனுக்கு தடை?அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்!

தமிழ்நாட்டில் கோபிமஞ்சூரியனுக்கு தடை?அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்!

அரசாணை வெளியீடு 

இந்நிலையில், இனி அரசு பள்ளி மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவிகளுக்கும் மாதம் ரூ.1000 வழங்கும் புதுமைப்பெண் திட்டத்தை வரும் கல்வியாண்டில் நிறைவேற்றவுள்ளதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதன்மூலம், 49,664 பேர் பயன் பெறுவார்கள் என்று தெரிவித்துள்ளனர்.

புதுமைப்பெண் திட்டம்; இனி மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 - அரசாணை வெளியீடு ! | 1000 To Schoolgirls Receiving Government Aid

இது குறித்து சமூகநலத் துறை செயலர் ஜெயஸ்ரீ முரளிதரன் வெளியிட்டுள்ள அரசாணையில், மூவலூர் ராமாமிர்தம் அம்மை யார் உயர்கல்வி உறுதி திட்டம் (புதுமைப் பெண் திட்டம்) வரும் கல்வி ஆண்டில் (2024-2025) அரசு உதவி பெறும் பள்ளி மாணவிகளுக்கும் நீட்டிக்கப்படும்.

அத்திட்டத்துக்கு ரூ.370 கோடி ஒதுக்கப்படும் என்று பட்ஜெட் உரையின்போது நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் அறிவித்தார். இதையடுத்து இத்திட்டம் தற்போது செயல்படுத்தப்படுகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.