மக்களவை தேர்தல் ; வாக்குப்பதிவு இயந்திரத்தை தீ வைத்து எரித்த இளைஞன் - VIRAL VIDEO !
இளைஞர் ஒருவர் வாக்குப்பதிவு இயந்திரத்தை தீ வைத்து கொளுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மக்களவை தேர்தல்
நடப்பாண்டின் மக்களவை தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும் வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடத்தப்படுகிறது. அதில் முதற்கட்டம் கடந்த ஏப்ரல் 19-ம் தேதி அன்று 102 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. மற்றும் 2ம் கட்டம் 88 தொகுதிகளுக்கு நடைபெற்றது.
இதை தொடர்ந்து, அசாம், பீகார், சத்தீஸ்கர், கோவை, குஜராத், கர்நாடகா, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள 93 மக்களவைத் தொகுதிகளுக்கான, மூன்றாவது கட்டத் தேர்தல் நடந்தது.
வாக்குப்பதிவு
இந்த நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் பாராமதி, ராய்காட், உஸ்மானாபாத், லத்தூர் (தனி), சோலாப்பூர் (தனி), மாதா, சாங்லி, சதாரா, ரத்னகிரி-சிந்துதுர்க், கோலாப்பூர், ஹட்கானங்கள் ஆகிய தொகுதிகளில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்குகளை பதிவு செய்தனர்.
இதில் மகாராஷ்டிரா பகல்வாடி கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் காலை முதல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. அப்போது, வாக்குச்சாவடிக்குள் திடீரென புகுந்த இளைஞர் ஒருவர் அங்கு இருந்த இவிஎம் இயந்திரத்தை தீ வைத்து கொளுத்தினார்.
இதை பார்த்து அதிர்ச்சியான தேர்தல் அதிகாரிகள், தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். பிறகு, பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அந்த இளைஞரை மடக்கிப் பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். எதற்காக இப்படி செய்தார் என்று போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் காரணமாக தடைபட்டு இருந்த வாக்குப்பதிவு சிறுது நேரம் கழித்து மீண்டும் தொடங்கியது.